சகலமுமாய் இருப்பது சிவம். சிவம் என்ற அழியாத பேராற்றலின் தத்துவ வடிவமே சிவன் என்று போற்றப்படுகிறது என்கிறது ஆன்மிகம். எங்கும் எதிலும் நிறைந்துள்ள சிவத்தின் ஆற்றல் பொங்கிப் பெருகும் ஒரு இரவே சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. அது ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி. நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி என்ற நான்கு சிவராத்திரிகளை விடவும் சிறப்பானது மகா சிவராத்திரி. அதுவே சகல ஜீவன்களும் சிவத்தை உணர்ந்து கொள்ளும் மகிமை மிக்க திருநாள். சிவத்திலிருந்தே அனைத்தும் உண்டாகி, சிவத்திலேயே அடக்கமாகும் பிரபஞ்சத்தின் சிருஷ்டி-பிரளயம் என்ற நுட்பமான செயல்பாட்டை விளக்கும் விழாவே சிவராத்திரி. பெரும் ஊழி காலத்தே ஈசனால் படைக்கப்பட்ட சகல லோகங்களும் சகல ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த அந்தகார இருளில் சிவனோடு கூடியிருந்த சக்திதேவி தனியே பிரிந்து மீண்டும் சிருஷ்டியைத் தொடங்க ஈசனை நினைத்து பூஜித்த இரவே சிவராத்திரி எனப்படுகிறது. ஆம், ஆரம்பம் உருவாகக் காரணமாக எழுந்த இந்த சிவராத்திரியே சுபீட்சங்கள் அனைத்தையும் அருளும் ஒரு திருநாள் எனலாம். ஞானமும் முக்தியும் அருளும் இந்த சிவராத்திரி வைபவம் இந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ம் நாள் வியாழன் அன்று நடைபெற உள்ளது.
சிவ ராத்திரி தினத்தன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் காலம்வரை சிவ பெருமானை பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு அனைத்து வித பாக்கியங்களும் தந்து, இறுதியில் மோட்சம் தர வேண்டும் என ஈசனை அன்னை மகேஸ்வரி வேண்டிக் கொண்டாள். அதன் படி சிவராத்திரி தினத்தில் யாரெல்லாம் ஈசனை நினைத்து வழிபடுவார்களோ அவர்களின் அனைத்து இன்னல்களும் நீங்கி மோட்சமும் கிட்ட வேண்டும் என ஈசனிடம் அன்னை வரம் பெற்றார் என்பது ஐதிகம்.
மகா சிவராத்திரி நாளன்று விரதமிருந்து நான்கு கால பூஜைகளும் செய்பவர்களுக்கு நற்கதியும் சிவலோக பிராப்தமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 7 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடையும் என்பது ஐதிகம். ஒரு சிவராத்திரி பூஜை என்பது ஒரு அசுவமேத யாகம் செய்த பலனை அளிக்குமாம். வாழ்வில் தமக்கு மட்டுமல்ல, தன்னுடைய வாரிசுகளுக்கும் செல்வம் வெற்றி யாவும் கிட்டிட விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும் என்கின்றன ஞான நூல்கள். மார்ச் 11 வியாழன் இரவு 10 மணிக்குத் தொடங்கும் முதல் கால பூஜை தொடங்கி மறுநாள் அதிகாலை 6 மணிக்கு முடியும் நான்காம் கால பூஜை வரை ஒவ்வொன்றும் பல சிறப்பான பலன்களை அளிக்கும் என்பது சிவனைப் போன்றே மாறாத ஓர் உண்மை.
முதல் கால பூஜை இரவு - 10 மணிக்கு: இந்த வேளையில் பிரம்மதேவன், ஈசனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் வழிபட்டால் ஜனன ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் நீங்கும். தலை எழுத்தே மாறி சுபீட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
இரண்டாம் கால பூஜை இரவு - 12 மணிக்கு: இந்த வேளையில் மகாவிஷ்ணு, ஈசனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் வழிபட்டால் வறுமை, கடன் தொல்லை, மன உளைச்சல் நீங்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் கால பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்தத் தெளிவு உண்டாகும். செல்வ சம்பத்துக்களும் குபேரனைப் போன்ற வாழ்வையும் அருளும் பூஜை இது.
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு - 2 மணிக்கு: இந்த வேளையில் அம்பாள் ஈசனை பூஜிப்பதாக ஐதீகம். மகா சிவராத்திரியின் உன்னதமான வழிபாட்டு நேரம் இது என்பார்கள். லிங்கோத்பவ காலமான இதில் ஈசனை வழிபட்டால் ஞானமும் திறமையும் கூடும் என்பார்கள். அத்தனை விஷயங்களையும் விருத்தியாக்கக் கூடிய அமோக வேளையிது. மேலும் சகல பாவங்களும் நீங்குவதோடு, எந்த தீய சக்தியும் விலகச் செய்யும் விசேஷ பூஜை இது. இந்த மூன்றாம் கால பூஜையில் இதுவரை வேறெங்குமே நடைபெற்றிராத வகையில் மகா மூலிகா அபிஷேகம் எனும் 208 அரியவகை மூலிகைகளைக் கொண்டு ஈசனுக்கு அபிஷேகம் செய்ய இருக்கிறார்கள் கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலய நிர்வாகிகள். லோக க்ஷேமத்துக்காகவும் வழிபடும் அன்பர்களின் ஏழேழ் தலைமுறைகளும் நீண்ட ஆயுளும், நீங்காத செல்வமும், நிறைந்த புகழும், நீடித்த ஆரோக்கியமும் பெற்று வாழ இந்த மகா மூலிகா அபிஷேகம் நடைபெற உள்ளது. சித்த புருஷர்கள் மட்டுமே செய்து வந்த இந்த மகத்தான அபிஷேகத்தை வாசகர்களான உங்கள் நலனுக்காக முதன்முறையாக நடத்த இருக்கிறோம். உங்களுக்காகவும் உங்களின் உறவுகள் மற்றும் நண்பர்களின் நலவாழ்வுக்காகவும் இதில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
நான்காம் ஜாமம் அதிகாலை - 4 மணிக்கு: இது தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும் என அனைத்து ஜீவராசிகளும் இணைந்து நான்காவது காலத்தில் ஈசனை பூஜிப்பதாக ஐதீகம். பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் வேண்டும் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது இந்த வேளை பூஜையின் நம்பிக்கை.
வாசகர்கள் கவனத்துக்கு...
மகா சிவராத்திரி அன்று கீழ்ப்பசார் ஶ்ரீசந்திரமெளலீஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜை - வழிபாடுகளுக்கு வாசகர் களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், நான்கு கால வழிபாடுகளுக்காக சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், அவர்களின் பெயர் - நட்சத்திரம் கூறி உரிய சங்கல்பத்துடன் நான்கு கால வழிபாடுகளிலும் சமர்ப்பிக்கப்படும்.
அத்துடன், அவர்களுக்கு மகா சிவராத்திரி நான்கு கால வழிபாட்டுப் பிரசாதங்களாக விபூதி, வில்வம், ருத்ராட்சம், காப்பு ரட்சை ஆகியவை (30.3.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி மகா சிவராத்திரி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வழிபாட்டு வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, இந்த வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன் பதிவு விவரங்களுக்கு: 89390 30246
மகா சிவராத்திரி வழிபாட்டில் நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
மகா சிவராத்திரி வழிபாடுசங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு, ஓர் ஆண்டுக்கான சக்திவிகடன் டிஜிட்டல் சந்தா பரிசு!
source https://www.vikatan.com/spiritual/temples/maha-sivarathri-event-at-chandramouleeswarar-temple-to-be-conducted-by-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக