இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகத் தடுப்பூசி போடும் பணிகள் சென்ற மாதம் தொடங்கியது. அதற்கு உதவும் வகையில் அரசு 'Co-WIN' என்ற செயலியையும் உருவாக்கியிருந்தது. ஆனால், அந்த செயலி சரியாக செயல்படவில்லை, அதில் பல குறைபாடுகள் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த செயலியானது மருத்துவப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்துவதற்காகப் பயனாளிகளுக்கு எளிதாகத் தெரியப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டிருந்தது. மருத்துவப் பணியாளர்களிடம் இருக்கும் பட்டியல்படி பயனாளிகளின் எண்ணிற்குக் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தடுப்பூசி பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். பயனாளிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் எளிமையாக இருக்க வேண்டும் என்றுதான் இந்தச் செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், செயலி சரியாகச் செயல்படவில்லை என நாடு முழுவதும் இருந்து புகார்கள் எழுகின்றன.
Also Read: கைநழுவிப் போகிறதா கருத்துரிமை?! OTT, சமூக வலைதளங்களுக்கான புதிய சட்டத்திருத்தம் சொல்வது என்ன?
குறிப்பிட்ட பட்டியல்படி குறுஞ்செய்திகள் அனுப்ப முடியவில்லை, காலையில் தடுப்பூசி போடப்பட வேண்டிய பயனாளிக்குக் குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர்தான் குறுஞ்செய்தி சென்று சேர்கிறது, தவறான பயனாளிக்குத் தகவல்கள் செல்வது, சரியான தகவல்களைத் தெரிவிக்காதது, ஒரே பெயர் இருமுறை வருவது எனச் செயலியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்வதாக அதனை உபயோகித்த மருத்துவப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படிச் செயலியில் குழப்பங்கள் ஏற்படுவதால், பல இடங்களில் மருத்துவப் பணியாளர்களே நேரடியாகப் பயனாளிகளை அழைத்து அறிவுறுத்தவும் செய்கின்றனர்.
கொரோனா தடுப்பூசி முதற்கட்டச் செயலியே இந்த நிலையில் இருக்கும்போது, இரண்டாம் கட்ட Co-WIN 2.0 செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தெரிகிறது.
source https://www.vikatan.com/technology/tech-news/co-win-app-not-working-properly-complaints-facility-level-workers
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக