சென்னை, கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (பெயர் மாற்றம்). இவர், 30.4.2021-ல் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``எனது தங்கையின் பெயர் சித்ரா (35) (பெயர் மாற்றம்)/ அவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்டார். 9 வயதில் மகன் உள்ளார். இந்தநிலையில். கடந்த 30-ம் தேதி அதிகாலை முதல் சித்ராவைக் காணவில்லை. எனவே அவரைக் கண்டுப்பிடித்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலீஸார் சித்ராவைத் தேடிவந்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை நேரத்தில் சித்ராவை இளைஞர் ஒருவர் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அதன்பிறகு இருவரும் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறிச் செல்வதை போலீஸார் சிசிடிவி மூலம் கண்டறிந்தனர். அதனால் போலீஸார் காரில் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர்.
Also Read: `எங்கே போனார் வணக்கம் சோமு?' -பெண் பேராசிரியைக் கடத்தல் வழக்கில் அலைக்கழிக்கும் அ.தி.மு.க புள்ளி
இந்தநிலையில் சித்ராவை காரில் அழைத்துச் சென்றது சக்திவேல் என்பவர் என்று தெரிந்தது. இவர், சித்ராவின் சகோதரர் சங்கர் குடியிருக்கும் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலைப்பார்த்து வருகிறார். அதனால் சங்கருடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு சங்கரின் தங்கை சித்ராவும் சக்திவேலுக்கு அறிமுகமாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் சித்ராவை அழைத்துச் சென்ற சக்திவேல், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு சித்ராவை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில தெரியவந்தது.
இதையடுத்து சித்ராவை அடைத்து வைத்திருந்த இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அங்குச் சென்ற போலீஸார் சித்ராவை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் சக்திவேல் மீது சித்ரா சரமாரியாக புகாரளித்தார். அதன்பேரில் சக்திவேலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிகாலை நேரத்தில் இளம்பெண்ணைக் காரில் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/women-kidnapping-in-chennai-and-sexually-abused
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக