Ad

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

உத்தராகண்ட்: தவுலிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு - மீட்புப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள்!

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் தபோவனம் பகுதியிலுள்ள ரெனி கிராமத்தில் பாய்ந்து வரும் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அதிகளவிலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால், அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து காவல்துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்த பின்னர் சமோலி மாவட்ட நிர்வாகிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ``சமோலி மாவட்டத்திலுள்ள தவுலிகங்கா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் துரிதமாக செயல்பட வேண்டும். அதேநேரத்தில் இதுகுறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



source https://www.vikatan.com/news/disaster/massive-flooding-in-uttarakhands-chamoli-district

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக