கொரோனாவால் முடங்கிப்போன கடந்த ஆண்டுக்கும் சேர்த்து ஓவர்டைமில் உழைக்கிறது கோலிவுட். ஒவ்வொருவார வெள்ளிக்கிழமையும் மூன்று நான்கு படங்கள் ரிலீஸாகும் அளவுக்கு படங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதில் இந்த ஆண்டு மட்டுமே சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸாகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் 'டாக்டர்' படம் மார்ச் 26-ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகிறது. இதற்கு அடுத்தபடியாக 'நேற்று இன்று நாளை' படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கியிருக்கும் `அயலான்' படமும் இந்தாண்டு ரிலீஸாகியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் முதல் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
`அயலான்' படத்துக்கு அடுத்து அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் `டான்' படமும் இந்த ஆண்டே ரிலீஸாகிறது. `டான்' படத்தின் ஷூட்டிங் அடுத்தவாரம் கோயம்புத்தூரில் தொடங்குகிறது. இந்தப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். `டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன்தான் 'டான்' படத்திலும் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி என பெரிய நடிகர்கூட்டமே இந்தப்படத்தில் நடிக்கிறார்கள்.
இதுத்தவிர சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் 'வாழ்' படமும் இந்தாண்டு ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. `அருவி' படத்தை இயக்கிய அருண்பிரபு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
2021-ல் சிவகார்த்திகேயன் செம பிஸி!
source https://cinema.vikatan.com/tamil-cinema/sivakarthikeyan-all-set-for-hattrick-releases
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக