மம்தா பானர்ஜி முன்னிலை!
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியைத் தழுவினார். இருந்தபோதும் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
6 மாதகாலத்துக்குள் எம்எல்ஏ வாக வெற்றிபெற வேண்டும் என்பதால் அவருக்காக பவானிபூர் தொகுதி எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி களம் இறங்கினார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சார்பில் பிரியங்கா டிப்ரேவால் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். செப்டம்பர் 30-ம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானது. இன்று பவானிபூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/tamil-news-today-02-10-2021-just-in-live-updates-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக