Ad

வெள்ளி, 29 அக்டோபர், 2021

Tamil News Today: தமிழ்நாட்டில் பரவலாக கனமழை... பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மதுரை:  முத்துராமலிங்கனார்- மருது சகோதரர் சிலைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

மதுரை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு பசும்பொன் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை!

தமிழ்நாட்டில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தப்படி மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் நீடித்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை

ராமநாதபுரம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும், விருதுநகர் மாவட்டத்துக்கு பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-30-10-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக