Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

Meta: ஃபேஸ்புக் நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்... என்ன காரணம்?

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் இன்க் (Facebook Inc.,) என்ற பெயரை அந்நிறுவனம் மாற்றவிருப்பதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஃபேஸ்புக்கின் வருடந்திர கனெக்ட் நிகழ்வு நேற்று நடந்து முடிந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய கனெக்ட் நிகழ்வில் ஃபேஸ்புக் இன்க் என்ற பெயருக்கு மாற்றாக புதிய பெயரை அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

Meta
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஆக்குலஸ் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் இனி மெட்டா (Meta) என அழைக்கப்படும். ஃபேஸ்புக் சமூக வலைதள சேவை அதே பெயருடனே தொடரும்.

மெட்டாவெர்ஸைக் கட்டமைப்பதில் மார்க் அன் கோ தீவிரமாக இறங்கியிருப்பதை ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இந்தப் பெயர் மாற்றம் அதனை இன்னும் வலுவாக்கியிருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து அவர் பேசும் போதும், "தற்போது ஈடுபட்டிருக்கும் செயல்பாடுகளையோ திட்டங்களையோ பிரதிபலிப்பதாக ஃபேஸ்புக் என்ற பெயர் இல்லை, அது சமூக வலைதளத்தை குறிப்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி இருக்காது, ஃபேஸ்புக் என்ற ஒரு சமூக வலைத்தள நிறுவனமாக இல்லாமல் மெட்டா என்ற மெட்டாவெர்ஸை மையப்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனமாக அறியப்படும்" என அவர் பேசியிருக்கிறார்.

ஃபேஸ்புக் மெட்டா

இணையத்தின் அடுத்த கட்டமாக இந்த மெட்டாவெர்ஸ் இருக்கும், அந்த அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இருக்க வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறார் மார்க். அதன் வெளிப்பாடாகவே இந்தப் புதிய பெயர் பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/technology/tech-news/facebooks-parent-name-changed-whats-the-new-name

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக