Ad

சனி, 30 அக்டோபர், 2021

பசும்பொன்: மிஸ்ஸான எடப்பாடி, பன்னீர்... உற்சாகமிழந்த அதிமுக; மகனுடன் வந்த வைகோ!

இன்று பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜை விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது அதிமுகவினருக்கு ஏமாற்றத்தையும், முக்குலத்தோர் அமைப்புகள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பசும்பொன்னில் முதலமைச்சர்

அதேநேரம் திமுக சார்பில் வழக்கத்தை விட உற்சாகமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மதுரை கோரிப்பாளையத்திலும், பசும்பொன்னுக்கும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

தென் மாவட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துகொண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டும் விழாக்களில் தேவர் குருபூஜை முக்கியமானது.

மகனுடன் வந்த வைகோ

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் அனைத்துக்கட்சி தலைவர்களும் வருகை தந்து மரியாதை செய்வார்கள்.

கடந்த காலத்தில் அஞ்சலி செலுத்த வந்த எடப்பாடி-ஓ.பி.எஸ்

அதிலும் குறிப்பாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலங்களில் பலமுறை பசும்பொன்னிலுள்ள தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்திருக்கிறார். அங்குள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா உத்தரவின்பேரில் 8 கிலோ எடையில் கிரீடம், தங்க கவசம் வழங்கப்பட்டு அது இன்றுவரை அதிமுக பொருளாளர் கண்காணிப்பில் இருந்து வருகிறது.

Also Read: சசிகலா-வுக்கு, இ.பி.எஸ் டீமிலிருந்து புது ஆதரவு... உடைந்து போன எடப்பாடி! | Elangovan Explains 

ஜெயலலிதா மறைவுக்கு பின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் பசும்பொன்னுக்கு வருகை தந்துள்ளனர். அவர்களுடன் 15-க்கும் குறையாத எண்ணிக்கையில் அமைச்சர்கள் வருவார்கள். இப்படி தேவர் குருபூஜை விழாவை அதிமுக விழாபோல நடத்தி வந்த நிலையில் இந்தாண்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் வராமல், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ போன்றவர்கள் மட்டும் வருகை தந்தது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அண்ணாமலை அஞ்சலி

கடந்த சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி கட்சிக்குள் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதும், சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியுள்ளதும், அவரை ஆதரித்து ஓ.பி.எஸ் போன்றவர்கள் பேசி வருவதும் அதிமுகவுக்குள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி ஒருநாள் முன்பாக சசிகலா பசும்பொன்னுக்கு வந்தபோது அவருக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் அதிமுக நிர்வாகிகள்

இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் இந்தாண்டு தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள முடியவில்ல என்றும், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவால் தொடரும் திதியால் அக்டோபர் 30 வரை சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது என்பதால் அவரால் பசும்பொன்னுக்கு செல்ல முடியாது, என்பதாலும் பெரியகுளத்திலுள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பார் என்றும் அவர் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், எடப்பாடியும் ஓ.பன்னீர்செலவமும் பசும்பொன்னுக்கு வராததற்கு உண்மையான காரணம் சசிகலா வந்து சென்றதும், முக்குலத்தோர் மக்கள் மத்தியில் சமீபகாலமாக இவர்கள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்திதான் என்று அதிமுகவினரே கூறுகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள்

கடந்த காலங்களில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுப்பார்கள். இந்தாண்டு அதுவும் மிஸ்ஸிங்.

46-வது ஆண்டாக தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இம்முறை மகன் துரை வைகோவுடன் வந்திருந்தார்.

காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், கே.ஆர்.ராமசாமி, அமமுக சார்பில் டிடிவி தினகரன், பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், த.மா.கா ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் வருகை தந்தனர்.

கோரிப்பாளையத்தில் முதலமைச்சர்

கொரோனா கட்டுப்பாட்டால் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு உற்சாகமாக நடைபெற்ற தேவர் ஜெயந்தியில் கலந்துகொள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பசும்பொன்னுக்கு வராதது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/pasumpon-devar-guru-poojai-event-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக