Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

கொடநாடு வழக்கு: கனகராஜ் சகோதரருக்கு 5 நாள் போலீஸ் காவல்... ஊட்டி நீதிமன்றத்தில் நடந்தது என்ன?!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் கூடுதல் விசாரணை 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக கருதப்படும் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக கனகராஜின் சகோதரர்கள் தனபால், ரமேஷ் ஆகியோரிடம் பலகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

kodanad case

இந்த விசாரணையில் இருவருமே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த விசாரணை குழுவினர், இருவரிடமும் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர். கொடநாடு கொலை கொள்ளை வழக்குக்கும் இந்த இருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் போலீஸார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனபால், ரமேஷ் ஆகிய இருவரிடமும் மேல் விசாரணை நடத்த வேண்டும் என விசாரணைக்குழு தரப்பில் மாவட்ட நீதிபதி சஞ்ய் பாபாவிடம் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி, தனபாலை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி சுரேஷ் தலைமையிலான போலீஸார், கூடலூர் கிளை சிறைக்கு சென்று, அங்கிருந்து தனபாலை ஊட்டிக்கு அழைத்து வந்தனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப்பின், 5 நாள்கள் போலீஸ் தரப்பில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி சஞ்சய் பாபா.

kodanad case

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய எதிர்தரப்பு வழக்கறிஞர்களிர் ஒருவர், "இந்த வழக்கின் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது உட்பட 4 வழக்குகளின் கீழ் கடந்த வாரம் அவர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக இருந்த கனகராஜின் செல்போனை எரித்து அழித்திருக்கிறார்கள். எனவே இவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 5 நாள்கள் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதற்கிடையில் தனபால், ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டு வக்கீல்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தனபாலை காவலில் அழைத்துச் சென்றனர். இந்த விசாரணைக்குப்பின் பல முக்கிய தகவல்கள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது"என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/5-days-of-police-custody-for-danapal-kodanad-case-current-update

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக