Ad

புதன், 27 அக்டோபர், 2021

Doctor Vikatan: முக நரம்புகளில் வலி; எனக்கு சித்த மருத்துவம் உதவுமா?

என் வயது 42. ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal neuralgia) பாதிப்பு உள்ளது. இதற்கு சித்த மருத்துவம் உதவுமா? உணவுமுறை எப்படி இருக்க வேண்டும்?

- பிரகாஷ் (விகடன் இணையத்திலிருந்து)

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி.

``ட்ரைஜெமினல் நியூரால்ஜியா என்பதை தமிழில் முக்கிளை நரம்பு வலி என்கிறார்கள். இந்த பாதிப்புக்கு அமுக்கரா சூரணம், திரிகடுகு சூரணம், லவங்காதி சூரணம், பூனைக்காலி சூரணம், ஓரிதழ் தாமரை சூரணம் போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம். இந்த எல்லா மருந்துகளுமே முக நரம்புகளுக்கு நல்ல வலுவைக் கொடுக்கக்கூடியவை. முக நரம்புகளில் ஏற்படும் வலியையும் குறைக்கக்கூடியவை. இவை தவிர மேல்பூச்சாகப் பயன்படுத்தக்கூடிய எண்ணெய்களும் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் உங்களுக்கு இந்தப் பிரச்னையின் தீவிரம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அதற்கேற்ப மருத்துவர் இவற்றைப் பரிந்துரைப்பார்.

Also Read: Doctor Vikatan: எப்போதும் சோர்வு; நன்றாகத் தூங்கி எழுந்த பிறகும் தொடரும் தூக்கம்; என்னவாக இருக்கும்?

உணவுமுறையில் செய்யக்கூடிய சில மாற்றங்களும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை ஓரளவுக்கு குறைக்கும். அதாவது முடக்கற்றான் கீரை, வாதநாரயணன் கீரை, முருங்கை வித்து, பாதாம் பருப்பு போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

உளுந்து சேர்த்த உணவுகள் உதவும். தவிர சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, பூண்டு போன்றவை உணவில் நிச்சயம் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ளவும். வாயு நிறைந்த உணவுகள், முதல்நாள் சமைத்த உணவுகள், குளிரவைத்த உணவுகள், புளித்த உணவுகள் போன்றவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவம்

Also Read: Doctor Vikatan: பசித்த பிறகு சாப்பிடுவது; நேரந்தவறாமல் சாப்பிடுவது; எது சரி?

தலைக்குக் குளித்தால் உடனே தலையின் ஈரம்போகத் துவட்டிக் காய வைக்க வேண்டும். எப்போதும் வெதுவெதுப்பான உணவுகளையே சாப்பிடவும். உடலில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். சுத்தமான நெய்யை உருக்கி உணவில் சேர்த்துச் சாப்பிடலாம். ஏசியின் குளிர்ச்சி நேரடியாகப் படும்படி உட்கார்ந்திருப்பது, தூங்குவது போன்றவற்றைத் தவிர்த்துவிடவும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/i-suffer-from-trigeminal-neuralgia-is-there-any-solution-for-this-in-siddha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக