Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

`ரிப்போர்ட் கார்டு கொடுக்க நான் பெரிய ஆள் இல்லை..!' - திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்

கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் தெலங்கானா ஆளுநரும் பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார்.

தமிழிசை சௌந்தரராஜன்

Also Read: 100 கோடி கொரோனா தடுப்பூசி; இந்தியா கடந்துவந்த பாதை - ஒரு பார்வை!

நிகழ்ச்சக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “இந்தியாவில் தற்போதுவரை 104 கோடியே 4 லட்சத்து 99 ஆயிரத்து 873 தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய சாதனை. தடுப்பூசி பணிகளில் மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது.

கொரோனா பணிகளில் அரசியல் விமர்சனங்கள் கூடாது. மேலும் புதுச்சேரி ஆளுநராக இருந்தாலும் அங்கிருந்து 30 சதவிகிதம் ஆக்ஸிஜன் தமிழகத்துக்கு வழங்கினோம். மீண்டும் கொரோனா ஆங்காங்கே பரவி வருகிறது. பொதுமக்கள் கண்டிப்பாக கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ்

ஆளுநர் அரசாங்கத்திடம் தகவலை பெறலாமா? என விமர்சனம் எழுந்துள்ளது. தமிழகத்தில் அனைத்தும் அரசியல் ஆக்கப்படுகிறது. நவம்பர் 11-ம் டெல்லியில் ஆளுநர் மாநாடு நடக்கிறது. மத்திய அரசுக்கு அனைத்து ஆளுநர்களும் தகவல் வழங்க வேண்டும்.

அதனால் தான் ஆளுநர்கள் தகவல்களை பெற்றுள்ளோம், நானும் தெலுங்கானா, புதுச்சேரி மாநில தகவல்களை பெற்றுள்ளேன். ஆளுநருக்கு தகவல் அளிக்கும் விவகாரத்தில் விமர்சனங்கள் எழுந்த போது, தமிழக அரசு சரியாக அணுகியது. ஆனால் அரசியல் கட்சிகள் மட்டுமே அனைத்தையுமே விமர்சனம் செய்து வருகின்றனர்.

தமிழிசை சௌந்தரராஜன்

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழகத்தில் கடைபிடிக்கப்படவில்லை” என்றவரிடம், “தமிழகத்தில் கடந்த 6 மாதங்களாக திமுக ஆட்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டபோது, “ரிப்போர்ட் கார்டு கொடுக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/tamilisai-soundararajan-press-meet-in-coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக