பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
இன்றைய அவசர உலகில் அலுவலகம், வீடு, நட்பு, உறவு என்று நாம் முக்கிய அங்கம் வகிக்கும் சமுதாயத்தின் அனைத்து இடங்களிலும் அதிகாரத்துக்கு வருவதற்கான போட்டி என்பது நாம் வெளிப்படையாகக் காணும் ஒன்றாகும்.
ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் க்ரீனின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் 48 பற்றி இங்கு காண்போம். சாத்தான் ஓதும் வேதத்துக்கு ஒப்பாகவே தன்னுடைய இந்த 48 அறிவுரைகளைக் கருதினார் ராபர்ட் க்ரீன்.
(முதல் பாகம் : அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் - எழுத்தாளர் ராபர்ட் க்ரீன் சொல்ல வருவது என்ன? #MyVikatan )
(இரண்டாம் பாகம் : `அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் மோதல்!' - ராபர்ட் கிரீன் சொல்லும் தந்திரங்கள் #MyVikatan )
கறை படியாத கைகள் மிக அவசியம்
அதிகாரத்துக்கான போட்டியில் உங்களை முன்னிறுத்தி கொள்ள வெளிப்படையான குற்றங்களில் தொடர்பில்லாத கறைபடியாத கைகள் மிக அவசியம். கறை படிந்த கரங்கள் கொண்டவர்கள் அதிகார போட்டியில் வலுவில்லாதவர்களாகவே பார்க்கப்படுவார்கள்.
உங்கள் மீதான மற்றவர்களின் நம்பிக்கை
உங்களின் மீதான மற்றவர்களின் நம்பிக்கையை உரம் போட்டு வளருங்கள். உங்களின் பேச்சும். நடவடிக்கையும் என்றும் அவர்களின் நலனை பற்றியே என்று அவர்களை ஆழமாக நம்ப வையுங்கள். உங்கள் அதிகார போட்டியில் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் அவர்களை செய்யும் அளவுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களை ஆக்கிக்கொள்ளுங்கள்.
காரியத்தில் வீரியம்
முடிவெடுப்பதில், செயலாற்றுவதில் தீயாய் இருங்கள். வழவழ கொழகொழ என்று வலுவில்லாமல் சிந்திக்கும் , செயல்படும் வலுவில்லாத மனிதர்களை ஆதரிப்பதை யாரும் பொதுவாக விரும்புவதில்லை. பலசாலியின் பக்கமும், புத்திசாலியின் பக்கமும், செயல்வீரர்களின் பக்கமும் ஆதரவாக நிற்பதையே இந்த உலகம் விரும்புகிறது.
முடிவை ஆரம்பத்திலேயே தீர்மானியுங்கள்
ஒரு செயலை ஆரம்பிக்கும் முன்னே அதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டு அதற்கேற்ப செயல்திட்டம் தீட்டி செயலில் இறங்குங்கள்.
உங்களின் முயற்சிகளின் தீவிரம் பற்றி ஊர் அறிய தேவை இல்லை
ஒரு விஷயத்தை நீங்கள் பிரம்ம பிரயத்தனப்பட்டு மிகுந்த சிரமங்களுக்கு நடுவில் செய்து முடித்தாலும் அதை மற்றவர் அறியாமல் மறையுங்கள் . இல்லாவிட்டால் உங்களின் பலவீனம் வெளிஉலகுக்கு வெளிப்பட்டு உங்களை வலுவில்லாதவராக உங்கள் எதிரியின் முன் நிலைநிறுத்தும்.அதே போல ஒரு விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க நீங்கள் கையாண்ட உத்திகளை எக்காரணம் கொண்டும் யாரிடமும் நீங்கள் பகிரக்கூடாது. இது வெற்றிக்கான சூத்திரத்தை உங்கள் எதிரிக்கு நீங்களே சொல்லி கொடுத்தது போலாகிவிடும்.
மற்றவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வையுங்கள்
உங்கள் எதிரிகளுக்கு உதவும் நபர்களை உங்கள் தந்திரங்களால், உத்திகளால் உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வாருங்கள். அவர்களின் ஒவ்வொரு முடிவையும் நீங்கள் தீர்மானிக்கும் இடத்துக்கு நீங்கள் நகருவதும் அவர்களை நகர்த்துவதும் மிக அவசியம். இது உங்களின் எதிரிகளின் பலத்தை குறைப்பதில் உங்களுக்கு ரொம்பவே உதவும்.
தோரணை மிக அவசியம்
உங்களை நீங்கள் எந்த அளவு பலமுள்ளவர்களாக உங்கள் தோரணை மூலமாக வெளி உலகத்துக்கு காட்டி கொள்கின்றீர்களோ, அந்த அளவுதான் இந்த உலகம் உங்களை நம்பும். உங்களின் அதிகாரத்துக்கான போட்டியில் உங்கள் உடன் நிற்கும். அதனால் உங்களை வலுவானவராக உணருங்கள். அவ்வண்ணமே வெளிக்காட்டுங்கள்.
நேரம், காலம் மற்றும் பொறுமையின் முக்கியத்துவம்
காரியம் சாதிப்பதில் நேரம்,காலம் ரொம்ப முக்கியம். அந்த சரியான நேரம், காலம் வரும் வரையில் முழு தயாரிப்புடன் பொறுமையாக தேவைப்படும் ஆயுதங்களுடன் காத்திருப்பது மிக முக்கியம்.
எதிரிகளின் சிறு தவறுகளை புறக்கணியுங்கள்
நம் எதிரிகள் செய்யும் சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் விடுவது நம்மை பலமாகவும் , நம் எதிரியை பலவீனமாகவும் காட்டும். நம் எதிரி செய்யும் சிறு தவறுகளை பெரிதாக்கி அதன் மூலம் நம் எதிரிகள் மற்றவர்களிடம் கவனம் பெறுவதை தவிர்த்தல் நலம்.
உங்களை கவனத்தில் வைக்கும் விஷயங்களை முன்னிறுத்துங்கள்
மற்றவர் பார்வையில் கவனம் பெற கூடிய உங்களை பற்றிய விஷயங்களை முன்னிறுத்தி அதிகாரவர்க்கத்தின் கவனத்தை ஈர்க்கும் எல்லா வேலைகளையும் சத்தமில்லாமல் செய்யுங்கள்.
உங்கள் சிந்தனையை மறைத்து அடுத்தவர்களின் எண்ணங்களுக்கு தாளமிடுங்கள்
மற்றவர்கள் பொதுவாக விரும்பாத உங்களின் சிந்தனைகளை மனதுக்குள் மூடி போட்டு மறையுங்கள் . மற்றவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருந்தால் அவர்கள் வெற்றிக்கான பாதையில் உங்களுக்கு துணை நிற்பர்.
குழம்பிய குட்டையில் மீன் பிடியுங்கள்
எதிரிகளின் கோபத்துக்குத் தூபம் போட்டு அவர்களை தடுமாற வைத்து தவறு செய்ய வைத்து வீழ்த்துங்கள்
இலவசங்கள் என்னும் தூண்டில்
இலவசமாக உங்களுக்கு கொடுக்கப்படும் விஷயங்களை தீவிர ஆராய்ச்சிக்கு உட்படுத்துங்கள். எல்லா இலவசங்களுக்கு பின்னும் சொல்லப்படாத உங்களை கட்டுப்படுத்த நினைக்கும் சில எதிர்பார்ப்புகள் ஒளிந்து கிடக்கவே செய்யும் .அதற்க்கு பதில் உங்கள் பணத்தை வாரி இறைத்து உங்கள் எதிரணியினரை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள்.
பலசாலியை வென்றால் மட்டும் போதாது
ஒரு பலசாலியை நீங்கள் வெல்லும் பட்சத்தில் அந்த பலசாலியை போல பல மடங்கு சாதனைகள் புரிய முயல வேண்டும். இல்லை என்றால் இந்த உலகம் உங்களை ஒரு உண்மையான மிக பலசாலியான வெற்றியாளராக ஏற்றுக்கொள்ளாது.
காக்கைக் கூட்டத்தில் கல் எறியுங்கள்
உங்களுக்கு எதிராக அணி சேர்க்கும் கூட்டத்தின் தலைவனை முதலில் சரியான உத்திகளை பயன்படுத்தி முழுமையாக வென்று காட்டுங்கள். காக்கைக் கூட்டத்தில் கல் எறிந்தால் எப்படி அவை சிதறி ஓடுமோ அப்படி உங்கள் எதிரணியினரும் திசைக்கொருவராக சிதறி ஓடுவார்கள்.
மக்களின் மனதோடு உறவாடுங்கள்
இங்கு யாரையும் பலவந்தப்படுத்தி நம் பின் அணிதிரள செய்ய முடியாது. அதற்கு பதில் அவர்களின் மனங்களோடு உறவாடுங்கள். அவர்களை மனதளவில் நெருங்குங்கள். அவர்களை உங்களின் அன்பால், பண்பால், பேச்சால், நடவடிக்கையால் வசீகரியுங்கள். பின் பாருங்கள் உங்கள் காரியம் எப்படி எளிதாக நடந்தேறுகிறது என்று.
உங்கள் எதிராளிகளை நகலெடுங்கள்
உங்கள் எதிரணியினரின் குணாதிசயங்கள் மற்றும் நடவடிக்கைகளை போலவே உங்கள் குணாதிசயங்கள் மற்றும் நடவடிக்கைகளையும் மாற்றிக்கொள்ளுங்கள். இது உங்கள் எதிரணியினரை உங்களின் குணாதிசயங்களை பற்றிய பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும். உங்களை பற்றிய ஒரு முடிவெடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர்களை தள்ளும்.
மாற்றம் என்பது மருந்தளவில் இருக்கட்டும்
மாற்றம் அவசியம் என்று நீங்கள் ஊருக்கு உபதேசம் செய்யும் அதே வேளையில் நடைமுறையில் இருக்கும் எந்த பழக்கங்களையும் பெரும் மாற்றத்துக்கு உட்படுத்தும் ரிஸ்க்கை எடுக்க வேண்டாம். பலகாலமாக நடைமுறையில் இருக்கும் எந்த ஒரு விஷயத்தையும் ஒரே நாளில் மாற்ற எவரும் முன் வருவதில்லை. இதனால் நீங்கள் தேவை இல்லாமல் எதிரிகளை சம்பாதிக்கவே வாய்ப்பு உண்டு. முன்னேற வாய்ப்பில்லை. நீங்கள் விரும்பும் மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஒத்துழைப்புடன் மலரட்டும்.
உங்கள் அணி தலைமையின் கண்பார்வையில்...
உங்கள் அணிதலைமையின் கண்பார்வையில் மிகவும் திறமைசாலியாக. குறைகளற்றவராக உங்களை நீங்கள் வெளிப்படுத்தி கொண்டால் கண்டிப்பாக அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள். உங்களின் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள அவர்களின் அறிவுரைகளை நாடி நீங்கள் அவர்களிடம் செல்வதையே எந்த ஒரு அணிதலைமையும் விரும்பும்.அதனால் தப்பும் தவறும் கொஞ்சம் உங்களிடமும் உண்டு என்று நீங்கள் வேஷம் போடுவதில் தவறில்லை. இது அறிவுரை கேட்கிறேன் என்ற பெயரில் உங்கள் அணிதலைமைக்கு நீங்கள் மேலும் நெருக்கமாக உதவும்.
வெற்றிக்கு எல்லைக்கோடு இடுவீர்கள்
வெற்றிக்கான பாதையில் எல்லைக்கோடு எது என்பதை தெளிவாக தீர்மானியுங்கள். அந்த எல்லையில் உங்கள் வெற்றிப்பயணத்தை நிறுத்துங்கள்.வெற்றி தரும் புகழ் போதை உங்கள் கண்ணை மறைக்க வேண்டாம். உங்கள் தலையில் கனமாக ஏற வேண்டாம் . இது உங்களை நிலை தடுமாற வைத்து தலைகுப்புற கவித்து விடலாம்.
நிலையில்லா நிலைப்பாடு
உங்கள் நிலைப்பாடு நிலையில்லாத ஒன்றாக மாறுதல்களுக்கு உட்பட்டதாக இருக்கட்டும். அதுதான் உங்களை எந்த வித சார்பும் இல்லாதவராக , எவருக்கும் பதில் சொல்ல தேவை இல்லாதவராக காட்டி வெற்றிப்பாதையில் பீடு நடை போட ஒரு ராஜபாட்டையை உங்களுக்காகத் திறந்து வைக்கும்.
மீண்டும் பேசுவோம்...
- விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
source https://www.vikatan.com/oddities/miscellaneous/the-48-laws-of-power-by-robert-greene
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக