Ad

ஞாயிறு, 23 மே, 2021

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு! - எவற்றுக்கெல்லாம் அனுமதி? #NowAtVikatan

அமலுக்கு வந்தது தளர்வுகள் இல்லா ஊரடங்கு!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று முதல் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு அமலுக்கு வந்தது. கடந்த 14 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கில் காலை 10 மணி வரையிலும் மளிகை கடைகள் திறந்திருந்தது. அதனை காரணமாக வைத்து மக்கள், பலர் சாலைகளில் சுற்றி திரிந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஊரடங்கு - மூடப்பட்ட கன்னியாகுமரி சுற்றுலாத்தலங்கள்

ஊடக துறை, பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், தண்ணீர் விநியோகம் போன்ற மிகவும் அவசியமான ஒரு சில பணிகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நபரை தவிர வேறு யாரேனும் சாலைகளில் தேவையின்றி வலம் வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தமிழககத்தில் இந்த ஒரு வார காலம் எவை எல்லாம் இயங்கும்... பதில் கிழே..!



source https://www.vikatan.com/news/general-news/24-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக