Ad

ஞாயிறு, 2 மே, 2021

எண்டோமெட்ரியோஸிஸ் இருந்தாலும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்!

தேவையற்ற திசுக்கள் இடுப்புப் பகுதி, கருப்பை மற்றும் கருக் குழாய்களில் வளர்ந்து கர்ப்பப்பையின் செயல்திறனை முற்றிலும் பாதித்து பல பிரச்னைகளை உருவாக்கும், இதனால் மாதவிடாய்ச் சுழற்சி மற்றும் குழந்தைப்பேறு பாதிக்கிறது.

முக்கிய அறிகுறிகள்

· மாதவிடாய் நாள்களில் அடிவயிறு மற்றும் இடுப்பில் அதீத வலி (dysmenorrhea)

· உடலுறவின்போது அதிக வலி

· சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி; வயிற்றுப்போக்கு, குறிப்பாக மாதவிடாய் நாட்களில்...

· மாதவிடாயின்போது அதிக இரத்தப்போக்கு

· உடல் சோர்வு

· குழந்தைப்பேறு தாமதமாகுதல்

நோயறிதல்

மேற்படி அறிகுறிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது பெல்விக் ஸ்கேன் (pelvic scan) மூலம் ரத்தக்கட்டிகள் (chocolate cyst) இருப்பது கண்டறியப்பட்டாலோ, எண்டோமெட்ரியோஸிஸ் இருப்பதாய் நாம் சந்தேகிக்கலாம். இதனைப் பேத்தோலாஜிக்கல் பயாப்ஸி (pathological biopsy) மற்றும் லேப்பரோஸ்கோப்பி (Laparoscopy) மூலம் உறுதி செய்வது அவசியம்.

கருத்தரித்தலை எண்டோமெட்ரியோஸிஸ் பாதிக்கும் விதம்...

· கருமுட்டையின் கருத்தரிக்கும் தன்மையைக் குறைக்கும், இதனால் கருமுட்டையின் தேக்கத்தைப் பாதிக்கிறது.

· கருக்குழாயில் மாற்றங்களை உண்டாக்கி, அங்கே அடைப்பை ஏற்படுத்துகிறது.

· தசைகள் (adhesions) வளர்ந்து இருந்தால், விந்தணுக்கள் கருமுட்டையைச் சென்றடையாது.

· பெண்கள் பூப்படைந்த பின் நீண்ட நாட்களாக எண்டோமெட்ரியோஸிஸ் கண்டறியப்படாமல் இருந்தால், மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் குழந்தைப்பேறு அடையத் தாமதமாகும் வாய்ப்பும் இருக்கிறது.

சிகிச்சை

எண்டோமெட்ரியோஸிஸ் பாதிப்பினால் குழந்தைப்பேறு அடைய தாமதம் ஏற்படுபவர்களுக்கு அறுவைச் சிகிச்சை அல்லது செயற்கைக் கருத்தரிப்பு முறை அல்லது இவை இரண்டுமே தேவைப்படலாம். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் நேரம் தாமதிக்காமல் நோயைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை எடுப்பதே சிறந்ததாகும். இதற்கு ஒரு சிறந்த கருத்தரித்தல் நிபுணரைச் சந்தித்து ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் அடிப்படையில் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.

முதல் நிலை மற்றும் 2 ஆம் நிலை எண்டோமெட்ரியோஸிஸ்...

கருப்பதிவு, கருத்தரித்தல் பாதிப்பு, வீக்கம், மற்றும் உடற்கூறியல் பிரச்சனை எல்லாம் முதற்கட்ட எண்டோமெட்ரியோஸிஸ்-ல் சேரும். இதனைக் கருத்தரிப்பு வல்லுநர்கள் லேப்பரோஸ்கோப்பி உதவியுடன் கண்டறிவார்கள்.

IUI எனப்படும் கருத்தரிப்பு முறையுடன் சேர்த்து செய்யப்படும் கருமுட்டைத் தூண்டுதலைக் கொண்டு, ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பினை அதிகப்படுத்தலாம். ஒருவரின் கருக்குழாயில் பாதிப்பு இருந்தாலும், முட்டை எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், ஆணிடம் ஏதேனும் குறை கண்டறியப்பட்டிருந்தாலும் அல்லது பிற கருத்தரிப்பு சிகிச்சைகள் பயனளிக்காமல் இருந்தாலும் IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

கவனிக்கப்படாத எண்டோமெட்ரியோஸிஸ் ஒருவரின் கருத்தரிப்புத் திறனைப் பாதிக்கும், எனவே அவர்கள் கருத்தரிப்புத் திறனைப் பாதுகாத்துக்கொள்வது மிகவும் அவசியம். தீவிர எண்டோமெட்ரியோஸிஸ் பாதிப்பு கொண்டவர்கள் fertility preservation மூலம் நாளடைவில் அவர்களுக்கு ஏற்படவிற்கும் கருமுட்டை குறைவிலிருந்து தடுத்துக்கொள்ளலாம். எனவே, திருமணத்தைத் தள்ளிப்போடாமல் கருமுட்டையைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் குழந்தைப்பேறு பாதிக்காமல் ஒரு முழுமையான குடும்பச்சூழலைப் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கள் Oasis கருத்தரிப்பு மையத்தில் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் வழங்கப்படுகின்றன. உலகத்தரம் வாய்ந்த வசதியுடன் கூடிய IVM, PGD, PGS சேவைகள் மற்றும் கருவுறுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. Oasis நன்கு தகுதிவாய்ந்த உயர் அனுபவம் மிக்க மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் குழுவுடன் வெளிப்படையான முழுமையான சேவையை அளிக்கிறது.

அப்பாயின்ட்மென்ட் மற்றும் ஆலோசனைகளுக்கு, அணுகவும்: Oasis Fertility - +91 73373 30452, +91 74483 37773

மேலும் தகவல்களுக்கு இந்த லிங்கைக் கிளிக் செய்யுங்கள்!



source https://www.vikatan.com/news/miscellaneous/endometriosis-is-no-more-an-excuse-for-infertility-oasis-fertility

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக