திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிளில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் கோட்டை என அழைக்கப்படும் ஆத்தூர் தொகுதி, அ.தி.மு.க’வின் கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சிக்கு கொடுக்கப்பட்டது. அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமா வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். முதல் நாள் பிரசாரம் முதல் இறுதி நாள் பிரசாரம் வரை, ஐ.பெரியசாமியை அட்டாக் செய்து பிரசாரம் செய்த அவரை, தொகுதிக்கு உட்பட்ட பல கிராம மக்கள், ஊருக்குள் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினர்.
Also Read: ‘ஐ.பெரியசாமி பற்றி யாரும் பேசாத உண்மைகளை நான் பேசுவேன்!’ - ஆத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா
தொகுதியில் கடுமையான எதிர்ப்பு இருந்த போதும், தொடர்ச்சியாக ஐ.பெரியசாமியை தாக்கிப் பேசி பிரசாரம் செய்தார். இதுவரை தன்னுடைய தொகுதியில், தன்னை தாக்கிப் பேசி யாரும் பிரசாரம் செய்யாத நிலையில், திலகபாமாவின் பிரசாரம், ஐ.பெரியசாமியை கோபப்படுத்தியது.
இந்நிலையில், ’திலகபாமா, இந்த தேர்தலில், டெப்பாசிட் கூட வாங்கக் கூடாது.! அப்படி வேலை செய்ய வேண்டும்.!’ என தன்னுடைய சகாக்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து, பிரசாரத்தை தீவிரப்படுத்தினர் தி.மு.க நிர்வாகிகள். இறுதியாக வாக்குப்பதிவின் போதும், திலகபாமாவை, தி.மு.க பூத் ஏஜெண்ட் ஒருவர் மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சர்ச்சை எழுந்தது. எல்லாம் கடந்த நிலையில், நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் விதியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமா டெபாசிட் கூட பெறவில்லை. இதில் மேலும் சுவாரஸ்யம் என்னவென்றால் ஐ.பெரியசாமியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நபராகவும் ஐ.பெரியசாமி பார்க்கப்படுகிறார்.
Also Read: `ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி
source https://www.vikatan.com/news/politics/i-periyasamy-wins-in-big-margin-all-other-candidates-lost-deposit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக