Ad

ஞாயிறு, 2 மே, 2021

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ராஜினாமா செய்த பழனிசாமி.. மே 7-ல் பதவியேற்கும் ஸ்டாலின்! #NowAtVikatan

ராஜினாமா செய்த பழனிசாமி... பதவியேற்கும் ஸ்டாலின்!

தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று, மே 2-ம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிஒட்டது. இன்னும் ஒரு சில தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.

ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மே மாதம் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை திமுக எம்.எல்.ஏ க்கள் கூட்ட நடைபெற இருக்கிறது. அதில் அவர் முறைப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார்..

இதனிடையே, தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வராக இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்... !



source https://www.vikatan.com/news/general-news/03-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக