Ad

திங்கள், 10 மே, 2021

ராகு - கேது தோஷத்தால் உண்டாகும் பிரச்னைகள் தீர்க்கும் எளிய 7 பரிகாரங்கள்!

இன்றைய பஞ்சாங்கம்

11. 5. 21 சித்திரை 28 செவ்வாய்க்கிழமை

திதி: அமாவாசை

நட்சத்திரம்: பரணி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை

எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை

நல்லநேரம்: காலை 7.30 முதல் 8 வரை/ மாலை 4.30 முதல் 5.30 வரை

துர்கை

சந்திராஷ்டமம்: அஸ்தம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

இன்று: சர்வ அமாவாசை

ராகு - கேது தோஷத்தால் உண்டாகும் பிரச்னைகள்

நவகிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் இந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ்வில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. இரண்டு கிரகங்களும் சாதகமான இடங்களில் அமர்ந்துவிட்டால் ஒருவர் வாழ்வில் பெறக்கூடிய யோகங்கள் அநேகம். அவ்வாறு ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் சரியாக அமையவில்லை என்றால் அவர் வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் உண்டாகும். திருமணத்தடை, வியாபாரத்தில் விரயம், வீண் பிரச்னைகள், விரக்தி, சொத்துப் பிரச்னைகள், வீண்பழி, குடும்பப் பிரிவு போன்ற பல்வேறு பிரச்னைகள் உண்டாகும். இத்தகைய பிரச்னைகள் தீர்க்கும் பல எளிய பரிகாரங்களை நம் ஆன்மிகம் சொல்கிறது. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.

11.5.21

இன்றைய ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள் இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

செலவு : முயற்சிகள் அனுகூலமாகும். பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் சிரமப் படுவீர்கள். - செலவே சமாளி!

ரிஷபம்

மகிழ்ச்சி : நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் உரிய நேரத்தில் உதவுவார்கள். குடும்பத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். - என்ஜாய் தி டே!

மிதுனம்

வரவு : இன்று பணவரவு ஏற்படும் நாள். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். மகிழ்ச்சியான நாள். - ஜாலி டே!

கடகம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று வந்து சேரும். பேச்சில் மட்டும் பொறுமை தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

சிம்மம்

வெற்றி : அனைத்தும் சாதகமாக இருக்கும் நாள். பணவரவு காணப்படும். காரியங்களில் தாமதம் ஏற்பட்டாலும் அனுகூலமாக முடியும். சகோதர உறவுகள் உதவுவார்கள். - ஆல் இஸ் வெல்!

கன்னி

கவலை : தேவையற்ற கவலைகள் மனதை ஆக்கிரமிக்கும். முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும். இறைவழிபாட்டில் மனதை செலுத்த வேண்டிய நாள். - இறைவன் இருக்க பயம் ஏன்?!

துலாம்:

நன்மை : அனுகூலமான நாள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். முக்கியமான பிரச்னையைப் பேசித் தீர்ப்பீர்கள். - ஆல் தி பெஸ்ட்!

விருச்சிகம்

உதவி : எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும் நாள். பணவரவு ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் மனதைப் புரிந்துகொண்டு நடப்பார்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். - நண்பேன்டா!

தனுசு:

நிதானம் : காரியங்கள் அனுகூலமாக முடியும். பணவரவும் உண்டு. என்றாலும் பேசும்போது நிதானமாகப் பேசவும். ஆரோக்கியத்திலும் சிறு உபாதை ஏற்பட்டு நீங்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

மகரம்

சோர்வு : முற்பகலில் சோர்வும் பிற்பகலில் உற்சாகமும் ஏற்படும் நாள். நண்பர்கள் தரும் செய்தி மகிழ்ச்சியூட்டுவதாக அமையும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கும்பம்

அனுகூலம் : உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் அதற்குரிய பணவரவும் உள்ளதால் சமாளித்து விடுவீர்கள். நண்பர்களால் நன்மை கிடைக்கும். - நாள் நல்ல நாள்!

மீனம்

கவனம் : நன்மைகள் அதிக அளவில் நடைபெறும். செலவுகளுக்கு ஏற்பப் பணவரவு உண்டு. குடும்பத்தினர் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!



source https://www.vikatan.com/spiritual/astrology/7-remedies-to-overcome-rahu-ketu-dosham

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக