Ad

ஞாயிறு, 2 மே, 2021

தொழில் விருத்தி, வேலை வாய்ப்பு உண்டாகச் செய்ய வேண்டிய 4 பரிகாரங்கள்!

3. 5. 21 சித்திரை 20 திங்கள்கிழமை
திதி: சப்தமி இரவு 7.36 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: உத்திராடம் பகல் 1.54 வரை பிறகு திருவோணம்
யோகம்: மரணயோகம் பகல் 1.54 வரை பிறகு அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை
எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை
நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

பஞ்சாங்கம்

சந்திராஷ்டமம்: மிருகசீரிடம் பகல் 1.54 வரை பிறகு திருவாதிரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
இன்று: திருவோண விரதம்

இந்தக் காலகட்டத்தின் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அபிவிருத்தி. அதிலும் கடந்த ஓராண்டாக நம் நாட்டில் மற்றுமின்றி உலக அளவிலும் இந்தப் பிரச்னை மிகப்பெரியதாக உருவெடுத்திருக்கிறது. கொரோனா அச்சம், லாக்டௌன், சில துறைகள் இயங்கமுடியாத நிலை எனப் பல பிரச்னைகளும் வேலைவாய்ப்பையும் தொழில் வளர்ச்சியையும் பாதித்துவருகின்றன. இந்நிலையில் முன் எப்போதையும் விட நமக்கு தெய்வ பலம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அந்தப் பலத்தின் மூலம் நம்பிக்கையோடு வருங்காலத்தில் எதிர்கொண்டு வெற்றி பெறலாம். அதற்கான எளிய பரிகாரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

சுருக்கமான இன்றைய ராசிபலன்

இன்றைய விரிவான ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம் : கவனம் : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. உறவினர்கள் வகையில் சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

ரிஷபம் : பணிச்சுமை : சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நாள் முழுவதும் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும். - உழைக்கும் கரங்கள்!

மிதுனம் : குழப்பம் : தேவையற்ற குழப்பங்கள் மனதில் நிறைந்திருக்கும். இறைவழிபாடு அவசியம் மேற்கொள்ள வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. - இறைவன் இருக்க பயம் ஏன்?!

கடகம் : பிரச்னை : உறவினர்களால் சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். செயல்களும் அனுகூலமாவதால் கவலை இல்லை. - டேக் கேர் ப்ளீஸ்!

சிம்மம் : உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். செயல்கள் அனுகூலமாகும். ஆனாலும் செலவுகள் அதிகரித்தவண்ணம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். - என்ஜாய் தி டே!

கன்னி : சாதகம் : இன்று நாள் முழுவதும் செயல்கள் அனைத்தும் சாதகமாக முடியும். புதிய விஷயங்களைத் திட்டமிடலாம். உறவினர்களால் நன்மை உண்டாகும். - சாதகமான ஜாதகம் இன்று!

துலாம் : தன்னம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். சகோதரர்களால் செலவுகள் அதிகரிக்கும்.- நம்பிக்கை அதானே எல்லாம்!

விருச்சிகம் : பொறுமை : வரவும் செலவும் சரிசமமாக இருக்கும் நாள். என்றாலும் செயல்களில் பொறுமை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

தனுசு : பணவரவு : இன்று எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் நாள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் நாள். - ஜாலி டே!

மகரம் : நிதானம் : செயல்களில் நிதானமும் திட்டமிடுதலும் அவசியம். பண கைவசம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

கும்பம் : மகிழ்ச்சி : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நல்ல நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். - ஆல் தி பெஸ்ட்!

மீனம் : வெற்றி : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி ஏற்படும். சகோதர உறவுகளால் நன்மைகள் அதிகரிக்கும். செலவுகளில் மட்டும் கவனம் தேவை. - வெற்றிக்கொடிகட்டு!



source https://www.vikatan.com/spiritual/astrology/astrological-remedies-for-job-opportunity-and-business-development

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக