Ad

திங்கள், 10 மே, 2021

`16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்’ - இன்று பதவியேற்கிறார்கள் புதிய எம்.எல்.ஏ-க்கள்! #NowAtVikatan

16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (11-05-2021) நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக்கொள்கின்றனர். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றிருக்கும் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ-க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

கலைவாணர் அரங்கம் - சட்டசபை

இதற்காக அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை (12-05-2021) சபாநாயகர், மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/11-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக