Ad

புதன், 3 பிப்ரவரி, 2021

ஆச்சர்யம் கொடுத்த கௌசல்யாவின் கணவர்... சித்தார்த்தின் கண்ணீர்... அபியின் நிலை என்ன? #VallamaiTharayo

``உங்களுக்கு அவர் மேல அன்பு இருக்கிறதாலதான் குடிச்சதை நினைச்சு வருத்தமா இருக்கு. உங்க ரெண்டு பேருக்குமே அன்பு இருக்கு அபி. தேவையில்லாத ஈகோவால அவர் அன்பை உங்ககிட்ட காட்டிக்காம, உங்களையும் கஷ்டப்படுத்தி, அவரும் கஷ்பட்டுக்கிட்டு இருந்திருக்காரு. நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கிறப்பதான் ஒருத்தர் மேல இன்னொருத்தர் வச்சிருக்கிற அன்பு புரியுது. நீங்க ரெண்டு பேரும் பிரிய மாட்டீங்க அபி. கவலைப்படாதீங்க. என்னால உங்க குடும்பத்தில் பிரச்னை வந்துருச்சேன்னு நினைச்சு, தூங்கக்கூட முடியல. இப்போ நிம்மதியா இருக்கு” என்கிறான் கெளதம்.

``நான் அப்படியெல்லாம் யோசிக்கல” என்கிறாள் அபி.

Vallamai Tharayo

வக்கீலைப் பார்க்கப் போக வேண்டும் என்று அவசரப்படுத்துகிறார் கெளசல்யா. அதைப் பார்த்த அவரின் கணவர், ``சித்தார்த், நாம வக்கீலைப் பார்க்கப் போகல. இவ சொல்றாளேன்னு எல்லாத்துக்கும் தலையாட்டாதேடா” என்கிறார்.

``என்ன, இப்படியெல்லாம் பேசறீங்க? வாயை மூடுங்க. தப்பு செஞ்சவளோட வாழச் சொல்றீங்களா? முடியாது. டிவோர்ஸ் பண்ணதுக்கு அப்புறம் என் தம்பி தனியா இருக்கக் கூடாது. அதுக்குதான் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்” என்கிறார் கெளசல்யா.

``நீ கொஞ்சம் வாயை மூடு. என்னை முழுசா பேச விடு” என்று சற்றே குரலில் கடுமை காட்டும் கெளசல்யாவின் கணவரிடம், ``ஏன் மாமா, அக்காவை இப்படிப் பேசறீங்க?” என்கிறான் சித்தார்த்.

``நான் இதுவரை இப்படிப் பேசிருக்கேனா? ஆனா, அவ எல்லார் முன்னாடியும் வாயை மூடுங்கன்னு எத்தனை தடவை சொல்லிருக்கா? நான் கோவிச்சிருக்கேனா? இல்ல, நீதான் மாமாவை இப்படிப் பேசாதீங்க அக்கான்னு சொல்லிருக்கியா? உங்க அக்கா பேசறது உனக்குத் தப்பா தெரியலை. அதையெல்லாம் நான் பெரிய விஷயமா எடுத்துக்கறதில்லை.

Vallamai Tharayo

அக்கா உன்னை அம்மா மாதிரி பார்த்துக்கறதுதான் பிரச்னை. உனக்குக் கல்யாணம் ஆயிருச்சு. இன்னும் இவ சொல்றதையே கேட்டுட்டு நடக்காதே. அபி நல்ல பொண்ணு. குடிச்சிட்டு ஹர்ஷிதா வீட்ல ஒரு ராத்திரி முழுசும் நீ இருந்ததை, உன் அக்கா தப்பா எடுத்துக்கிட்டாளா? இல்லைல... அதே மாதிரியான சந்தர்ப்பம் அபிக்கும் அன்னிக்கு ஏற்பட்டிருக்கலாம்ல? இது தப்பு இல்லைன்னா, அதுவும் தப்பில்லைதானே? நல்லா யோசி. அழகான வாழ்க்கையை விட்டுடாதே. உன் அக்காவின் கல்யாணப் பேச்சுப் பிடிக்கலைன்னு எனக்குத் தெரிஞ்சதாலதான் சென்னைக்குப் போகச் சொன்னேன்” என்று முதல் முறை சரியான கோணத்தில் நீண்ட வாதத்தை எடுத்து வைக்கிறார் கெளசல்யாவின் கணவர்.

மீண்டும் கெளசல்யா வழக்கம் போல ஆரம்பிக்க, அவரை அமைதியாக இருக்கச் சொல்கிறான் சித்தார்த்.

கெளசல்யாவின் கணவர் கொஞ்சம் முன்னாலேயே இப்படிப் பேசியிருந்தால், கெளசல்யாவும் சித்தார்த்தும் திருந்தியிருப்பார்களோ?

ஆச்சர்யப்பட்ட கெளசல்யாவின் கணவர், ``என்ன யோசிக்கிறே? அபிகிட்ட எப்படிப் பேசலாம்னுதானே? நான் போய் பேசறேன். எல்லாம் சரியாயிரும்” என்று ஆறுதல் கூற, சித்தார்த் கண்ணீர் விடுகிறான்.

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-review-for-episode-73

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக