இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. பாடகர் ரியான்னா, போராளி கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் போராட்டங்களைப் பற்றிப் பேச உலகளவில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தற்போது இதைப் பற்றி விவாதித்து வருகின்றன. இந்த நிலையில், சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், அக்ஷய்குமார், அஜய் தேவ்கன், கௌதம் கம்பீர் போன்ற பலர் இந்தியாவின் உள்விவகாரங்களில் பிறர் தலையிடக்கூடாது என்று தங்களின் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இந்தியாவைப் பிரிக்க நடக்கும் சதி இது என்கிற ரீதியிலும் பலரின் கருத்துகள் அமைந்துள்ளன.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/protest/vikatan-poll-regarding-celebrities-tweet-on-farmers-protest
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக