சென்னை டெஸ்ட்டின் இரண்டாம் நாளான இன்று இரட்டை சதம் அடித்து அசத்தியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்.
கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் அடித்திருக்கும் இரண்டாவது இரட்டை சதம் இது. செம ஃபார்மில் இருக்கும் ஜோ ரூட் இன்றைய நாள் ஆட்டத்தை 128 ரன்களில் இருந்து தொடங்கினார். பென் ஸ்டோக்ஸோடு இணைந்து பெரிய கூட்டணிப்போட்ட ஜோ ரூட் மீண்டும் தனது வழக்கமான டிரேட்மார்க் ஷாட்களால் இந்திய பெளலர்களை மிரட்டினார்.
ஸ்டோக்ஸ் சிக்ஸர், பவுண்டரிகள் என விரட்ட, ஜோ ரூட்டும் இன்று கொஞ்சம் அதிரடியாகவே ஆடினார். இரண்டு சிக்ஸர், 19 பவுண்டரிகளோடு இரட்டை சதம் அடித்து ஆட்டத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் ரூட்.
195 ரன்களில் இருந்தபோது ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி வந்த அஷ்வினின் சுழல்பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸராக்கி இரட்டை சதம் அடித்தார் ஜோ ரூட். கடந்த மூன்றே டெஸ்ட்களில் மட்டுமே 600 ரன்களைக் கடந்திருக்கும் ஜோ ரூட், இந்த ஆண்டு 1500 ரன்களுக்கு மேல் அடித்து சாதனைப்படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 450 ரன்களைக் கடந்து விளையாடிக்கொண்டிருக்கிறது.
source https://sports.vikatan.com/cricket/joe-root-scores-double-century-in-chennai-test
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக