Ad

ஞாயிறு, 23 மே, 2021

கும்பகோணம்: பெண்களை மிரட்டி பாலியல் தொல்லை? ; அதிர வைத்த புகார்! - இளைஞர்களை தேடும் போலீஸார்

கும்பகோணம் பகுதியில் இளம் பெண் ஒருவர், ஆட்டோ ஓட்டுநர் தன்னை செல்போனில் போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதே ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 5 பேர் பெண்களை போட்டோ எடுத்து வைத்து கொண்டு மிரட்டி இன்டர்நெட் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பள்ளிவாசல் ஒன்றின் முன்னாள் நிர்வாகிகள் போலீஸிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொடர்பாக போலீஸில் புகார் அளித்தவர்கள்

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் சரீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது)(28). இவரின் கணவர் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரீனா தன் பிள்ளைகள் மற்றும் மாமியாருடன் மேலக்காவேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவர் தன்னை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக சரீனா கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸிடம் புகார் அளித்துள்ளார்.

புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``என் குழந்தைகளை அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் பள்ளிக்கு அழைத்து சென்று வந்தார். அப்போது என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறி, என்னை ஏமாற்றி என்னுடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோக்களை எடுத்து கொண்டார். பின்னர் அதை வைத்து அசாருதீன் என்னை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்தார்.

பாலியல்

இந்நிலையில் கடந்த 14-ம் தேதி என் வீட்டுவாசலுக்கு வந்து எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், என்னை பாலியல் உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்தினார். மேலும் மூன்றாவது நபர் மூலமாக எனது மாமியாரிடம் தெரியப்படுத்தி எனது வீட்டில் பிரச்னை செய்துள்ளார். இதையடுத்து எனது மாமியார் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டார். அசாருதீன் மேலும் 20 பெண்களிடம் பழகி மிரட்டி பணம் பறித்துள்ளார். அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதே போல் அசாருதீன் உள்ளிட்ட 5 பேர், பெண்களை மிரட்டி இன்டர்நெட் மூலம் பாலியல் தொழில் செய்து வந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸில் புகார்

இது குறித்து புகார் அளித்தவர்கள் தரப்பில் பேசினோம், ``இளைஞர்கள் 5 பேர், பெண்கள் சிலரிடம் பழகி போட்டோ எடுத்து வைத்து கொண்டு, பின்னர் அதை வைத்து மிரட்டி இன்ட்ர்நெட் மூலம் அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரிகிறது. இதனை செய்த அந்த இளைஞர்களுக்குள்ளேயே பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் ஆலோசனை நடத்தி அசாருதீன், அப்துல் ரஹ்மான், அகமது ஜப்ரான், சதக்கத்துல் ஆசிப் பாட்ஷா, பவாஸ் அகமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸிடம் புகார் அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜமாத்தில் உள்ள நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து, மேலக்காவேரி பகுதியில் உள்ள சில பெண்களை பணத்துக்காக இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

இந்த செயலில் ஈடுபட்ட அவர்கள் மீது வழக்கு பதிந்து உடனடியாக விசாரித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டும் என டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். இதனை தீர விசாரிக்கும் பட்சத்தில் பொள்ளாச்சியை போன்று இங்கேயும் பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவம் நடந்துள்ளது தெரிய வரும்” என்றனர். இது தொடர்பாக கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் உத்தரவில், கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு அசாருதீனை தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/women-complaint-against-auto-driver-and-4-others-in-sexual-harassment-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக