Ad

ஞாயிறு, 23 மே, 2021

எந்தக் கனவு பலிக்கும்? கெட்ட கனவுகள் பலிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

இன்றைய பஞ்சாங்கம்

24. 5. 21 வைகாசி 10 திங்கள்கிழமை

திதி: திரயோதசி இரவு 10.21 வரை பிறகு சதுர்த்தசி

நட்சத்திரம்: சித்திரை காலை 7.26 வரை பிறகு சுவாதி

யோகம்: சித்தயோகம் காலை 7.25 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: காலை 7.30 முதல் 9 வரை

எமகண்டம்: காலை 10.30 முதல் 12 வரை

நல்லநேரம்: காலை 6.30 முதல் 7.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

சிவபெருமான்

சந்திராஷ்டமம்: பூரட்டாதி காலை 7.26 வரை பிறகு உத்திரட்டாதி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

இன்று: சோமவார பிரதோஷம்

கெட்ட கனவுகள் பலிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

இரவில் உறங்கும்போது கனவு வருவது இயற்கை. பல நேரங்களில் நல்ல கனவுகளும் சில நேரங்களில் கெட்ட கனவுகளும் தோன்றும். இதற்குப் பல காரணங்களை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன. 'கனாக் கண்டேன் தோழி' என்று ஆண்டாள் நல்ல தொரு கனவு கண்டாள் அல்லவா? அதே போன்று கனவுகள் தோன்றும்போது நாம் மகிழ்ந்திருக்கலாம். ஆனால் கெட்ட கனவுகள் வரும்போது... நிச்சயம் மனம் வாடிப்போகும். சில கனவுகள் கண்விழித்ததும் மறந்துவிடும். ஆனால் சில கனவுகளோ திரைப்படம் போல மனதில் நின்று அச்சுறுத்தும். அப்படிப்பட்ட கனவுகளில் எது பலிக்கும்? கனவுகள் குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன? கெட்ட கனவுகள் பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பன குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

நிம்மதி : சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்கள் நிம்மதி தரும் செய்திகளைச் சொல்வார்கள் - ஆல் இஸ் வெல்!

ரிஷபம்

நன்மை : தனிப்பட்ட வேலைகளைப் பிற்பகலுக்குமேல் முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். கொடுத்துத் திரும்பவராத கடன் வசூலாகும். - நாள் நல்ல நாள்!

மிதுனம்

செலவு : தாய்வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரின் உடல் நலனிலும் அக்கறை தேவை. பிற்பகலுக்குமேல் அமைதியான மனநிலை வாய்க்கும் . - செலவே சமாளி!

கடகம்

கவனம் : அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானமாகச் செயல்படவும் . - டேக் கேர் ப்ளீஸ்!

சிம்மம்

பணவரவு : குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுச் செயல்படுவார்கள். சிலருக்கு வராது என்று நினைத்த பணம் வசூலாகும். - என்ஜாய் தி டே!

கன்னி

நிதானம் : முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். சின்னச் சின்னப் பிரச்னைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

துலாம்:

பணிச்சுமை : வீட்டிலிருந்து பணி செய்தாலும் பணிச்சுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தினர் உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். - உழைக்கும் கரங்கள்!

விருச்சிகம்

நல்ல செய்தி : பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்திகளும் வந்துசேரும். என்றாலும் சில முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். - ஆல் தி பெஸ்ட் !

தனுசு:

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாக முடியும். பணவரவுக்கும் வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மகரம்

பொறுமை : அனைத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். உறவினர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். - இதுவும் கடந்து போகும்!

கும்பம்

குழப்பம் : தேவையில்லாத குழப்பங்கள் பிற்பகல் வரை நீடிக்கும். எதிர்பார்த்த நற்செய்திகள் கிடைப்பதும் தாமதமாகும். செலவுகள் குறித்துக் கவலைப்படுவீர்கள். - நாளை உங்க நாள்!

மீனம்

பிரச்னை : பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகளைத் திட்டமிட உகந்த நாள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!



source https://www.vikatan.com/spiritual/astrology/spiritual-remedies-for-bad-dreams-not-to-come-true

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக