”அ.தி.மு.க சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தையும், ஆட்சியும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் - அம்மாவின் ஆசியோடு அடுத்தமுறையும் நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்” என்று ஆவேசமாக பேசினார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
திருச்சி கிழக்கு வட்டாட்சியர் புதிய அலுவலகத்திற்கான பூமி பூஜை கொட்டப்பட்டு பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்பு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய வெல்லமண்டி நடராஜன், ”திருச்சியில் மீண்டும் போட்டியிட நல்ல நாள் பார்த்து விருப்ப மனு அளிக்க இருக்கிறேன்.
நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என தலைமை கூறுகிறதோ அங்கு போட்டியிடுவேன். எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. அரசு விளம்பரங்களையே முதலமைச்சர் வழங்குகிறார். வேண்டுமென்றே சிலர் ஆதாயம் தேட அ.தி.மு.க வில் கருத்து வேறுபாடு உள்ளது என பரப்புகிறார்கள். அ.தி.மு.க சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த இயக்கத்தையும், ஆட்சியும் எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடுகளும் இல்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் - அம்மாவின் ஆசியோடு அடுத்தமுறையும் நாங்கள் தான் ஆட்சி அமைக்கப்போகிறோம்.
மக்களுக்கு நல திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளதா என்பதை வரும் தேர்தல் பறைச்சாற்றும். மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். அ.தி.மு.க 234 தொகுதிகள் 184 தொகுதிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது வரலாறு. அதே சாதனையை மீண்டும் படைப்போம். அ.தி.மு.க வின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கூறுவது அவர்களுடைய கருத்து. அதற்கு நாங்கள் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க-விற்கு மக்கள் பலம் தான் உள்ளது.” என்றார்.
ஒ.பி.எஸ் பரதனாக இல்லாமல் ராவணனுடன் சேர்ந்து விட்டார் என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்திருக்கிறாரே என்று அமைச்சர் வெல்லமண்டியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்க, அதற்கு, ’மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க மீது எந்த வித விமர்சனம் வைத்தாலும் அதற்கு பதில் அளிக்க தலைமையிலிருந்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்’. அவர்கள் அதற்கு சிறப்பான பதில் அளிப்பார்கள். இதற்கு நான் பதலளிக்க கூடாது என முடித்துக் கொண்டார்.
source https://www.vikatan.com/news/politics/wont-answer-propaganda-that-sasikala-is-aiadmik-general-secretary-says-minister-vellamanid-natarajan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக