சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 17 வயதான 11-ம் படிக்கும் மாணவியைக் காணவில்லை என்று அமைந்தகரை காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார், விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை காதலன் சரண்ராஜ் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியை மீட்ட போலீஸார், சரண்ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த சரண்ராஜூம் (19) மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் காதலித்திருக்கின்றனர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை வீட்டை விட்டு சரண்ராஜ் அழைத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மாணவியும் சரண்ராஜிம் காதலித்து வந்திருக்கின்றனர். மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சரண்ராஜ், அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். மாணவியும் காதலன் சரண்ராஜை நம்பி வீட்டை விட்டு வெளியில் சென்றிருக்கிறார்.
Also Read: தேனி : திடீர் வயிற்றுவலி... குழந்தை பெற்றெடுத்த சிறுமி உயிரிழப்பு! - போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சரண்ராஜைக் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். மாணவிக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-youth-in-pocso
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக