Ad

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சென்னை: நடிகை வாணிஸ்ரீ புகார் - சாட்சி கையெழுத்திட்டவர் சிக்கியது எப்படி?

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை நடிகை வாணிஸ்ரீ சந்தித்து பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

``நான் வாணி என்டர் பிரைசஸ் என்ற பெயரில் கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தேன். வாணி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் 16.9.1970-ல் 3 கிரவுண்ட் நிலத்தை பத்மினி என்பவரிடம் இருந்து வாங்கினேன். அந்த நிலத்தை போலியான பிழைத்திருத்தல் ஆவணம் மூலம் கிரையம் பெற்று அதன்மூலம் பட்டா வாங்கி சிலர் அபகரித்துக் கொண்டனர்.

வாணிஸ்ரீ

பின்னர், அந்த இடத்துக்குப் பூட்டு போட்டுவிட்டனர். அதன்பிறகு போலி ஆவணங்கள் மூலம் பொது அதிகாரம் பெற்றதுபோல செட்டில்மெண்ட் செய்திருக்கின்றனர். அதில் தமீம் அன்சாரி என்பவர் சாட்சி கையெழுத்திட்டிருக்கிறார். அதன்பிறகு அந்த இடத்தை 10 லட்சம் ரூபாய்க்கு வேறு நபருக்கு தமீம் அன்சாரி விற்றுவிட்டார். எனவே, போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையடுத்து புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரை நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், உதவி கமிஷனர் ராஜ்பால் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து தமீம்அன்சாரியிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

தமீம் அன்சாரி

Also Read: `பெண் விவகாரம்; நில அபகரிப்பு; 9 பிரிவுகளில் வழக்கு!’ -போலீஸ் பிடியில் வாணியம்பாடி தி.மு.க பிரமுகர்

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ``நடிகை வாணி ஸ்ரீயின் கணவர் பெயரில் அந்த இடம் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தமீம்அன்சாரியை கைது செய்திருக்கிறோம். நில அபகரிப்புத் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நடுவர் முன்னிலையில் தமீம்அன்சாரியை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-man-over-actress-vanisris-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக