அரசியல் மேடைகளில் கடந்த 35 ஆண்டுகளாக முழங்கிவருகிற நாஞ்சில் சம்பத்திடம் அவரது மேடை பயணம் மற்றும் அனுபவங்கள் குறித்து பல கேள்விகளை பிரசார பீரங்கி நிகழ்ச்சியில் முன்வைத்தோம். எல்லாக் கேள்விகளுக்கும் அவர் சுவாரஸ்யமாகப் பதில்கள் அளித்துள்ளார்.
``நீங்கள் ம.தி.மு.க-வில் இருந்தபோதும், அ.தி.மு.க-வில் இருந்தபோதும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரைக் கடுமையான சொற்களால் விமர்சித்திருக்கிறீர்கள். தற்போது, தி.மு.க ஆதரவு என்ற நிலைப்பாட்டுக்கு வந்த பிறகு ஸ்டாலினையும் கனிமொழியையையும் எப்படி எதிர்கொண்டீர்கள்?”
``என்னுடைய தமிழ் அதைச் சரிசெய்துவிடும். ஒரு மேடையில் பேசியபோது, `நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் ஒரே முகம் அண்ணன் ஸ்டாலின்’ என்று சொன்னேன். இதை யாரும் சொல்ல முடியாது.
திருநெல்வேலியில் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவுதினத்தில் பேசியபோது,`பெரியார் சந்திக்காத சவால், அண்ணா எதிர்கொள்ளாத அறைகூவல், கலைஞருக்கு வராத சோதனை... எங்கள் தளபதி அண்ணன் ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது. அதை அவர் எதிர்கொள்வதற்கு ஏதாவது பேச வேண்டும் என்கிற தாகத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன்’ என்று பேசினேன். என்னுடைய இந்த மொழி ஆளுமையில் எல்லாக் காயங்களும் கழிவுகளும் போய்விடும்.
சென்னையில் சி.சி.ஏ-வுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் ஒருவனாக நின்றுகொண்டிருந்தேன். மேடையில் இருந்த கனிமொழி என்னைப் பார்த்துவிட்டார். என்னை மேடைக்கு அழைத்துவருமாறு சேகர்பாபுவிடம் சொன்னார்.
மேடைக்கு சென்றவுடன், அவருக்கு முன்பாக என்னைப் பேசச் சொன்னார். அதன் பிறகு கடந்த ஜனவரி 1-ம் தேதி கனிமொழிக்கு வீட்டுக்குச் சென்றிருந்தேன். உங்கள் பிரசாரம் பெண்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று அவரிடம் சொன்னேன்’’.
துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு பேசுவதாக ஸ்டாலின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறதே?
“துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டு பேசுவது தவறல்ல. ஜனாதிபதியே துண்டுச்சீட்டு வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்.”
“நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் பேச்சுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“சீமானின் பேச்சில் வன்முறை வாடை வீசுகிறது.”
‘பிரசார பீரங்கி’ நேர்காணலில் நாஞ்சில் சம்பத்திடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளில் சில..
• சாமானியரைப் போன்ற முதல்வர் எடப்பாடியின் பேச்சு எப்படி இருக்கிறது?
• வைரலாகப் பேசும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்களுக்கு நீங்கள் பேச்சுப் பயிற்சி அளித்திருக்கலாமே?
• யாருடைய பேச்சைக் கேட்பதற்காக காத்துக்கிடந்தீர்கள்?
• திராவிடக் கட்சிகளின் மேடைகளில் சினிமா நட்சத்திரங்களை வைத்து பிரசாரம் செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன?
• தொல்.திருமாவளவன், சீமான், பிரமலதா விஜயகாந்த், தமிழருவி மணியன், டி.டி.வி.தினகரன், குஷ்பு ஆகியோர் பேச்சுகள் எப்படி இருக்கின்றன?
நாஞ்சில் சம்பத்தின் சுவாரஸ்யமான நேர்காணலைக் காண :
source https://www.vikatan.com/news/politics/nanjil-sambath-special-interview-for-junior-vikatans-prachara-beerangi-show
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக