Ad

புதன், 24 நவம்பர், 2021

``ஒயிலாட்டமும் கோலாட்டமுமே எங்கள் வாழ்க்கை"! - கலைகள் செழிக்கும் வடசேரி கிராமம்!

“இது மானாவரி மண்ணுங்கய்யா... வானம் பெஞ்சாத்தான் வேளாண்மை... எங்களுக்குப் பிழைப்புன்னு பாத்தா கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம், நாடகம்தான். எங்கூர்ல இருக்கிற ஐந்நூறு தலைக்கட்டுல பாதிக் குடும்பங்கள் இந்தக் கலைகளை நம்பித்தான் பிழைக்குது... தமிழ்நாடு தாண்டி இந்தியா முழுவதும் எங்க ஊரு ஆளுங்க சுத்தி வருவாக..." - காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டே பெருமிதமாகப் பேசுகிறார் வடசேரியின் ஒயிலாட்ட வாத்தியார் சின்னத்துரை.

வடசேரி கிராமம்

திருச்சி-திண்டுக்கல் பிரதான சாலையில் மணப்பாறையை ஒட்டியிருக்கிறது வடசேரி கிராமம். பொன்னர்-சங்கர் கதையோடு நெருங்கிய தொடர்புடைய ஊர். சிறியவர்களும் பெரியவர்களுமாக, இந்த கிராமத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள்.

பிற பகுதிகளில் ஆடும் ஒயிலாட்டத்துக்கும் வடசேரி ஒயிலாட்டத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. வழக்கமாக துணியைக் கையில் வைத்துக்கொண்டு மென்மையாக ஆடுவார்கள். இங்கே பிரம்பு வைத்து, ராமாயணப் பாடல்களைப் பாடியபடி உக்கிரமாக ஆடுகிறார்கள்.

வடசேரி கிராமம்

வடசேரி பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலைப்பயிற்சியைப் பார்த்தபடி ஏக்கத்தோடு அமர்ந்திருக்கிறார் ஒரு பெரியவர். கால்கள் மரத்துப்போய் அமர்ந்தபடியே நகரும் அந்தப் பெரியவர், வடசேரியின் மூத்த கலைஞர். பெயர் முத்து. ஒயிலாட்டமும் சிலம்பாட்டமும் அவருக்கு அத்துப்படியாம். பன்னிரண்டு வயது முதல் ஆடியவர். பலநூறு மேடைகள் கண்ட அவருடைய கால்கள் மரத்துவிட்டன.

ஒயிலாட்டமும் கோலாட்டமுமே எங்கள் வாழ்க்கை - கலைகள் செழிக்கும் வடசேரி கிராமம்!



source https://www.vikatan.com/arts/miscellaneous/manapparai-vadaseri-oyilattam-documentary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக