கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கவுதம் கம்பீர் பா.ஜ.க-வின் கிழக்கு டெல்லி எம்.பி-யாக இருக்கிறார். முழு நேர அரசியலில் முனைப்புக் காட்டி வரும், கவுதம் கம்பீருக்குக் காஷ்மீர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்விருத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகள் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுதிருப்பதாகக் கூறப்படுகிறது. தனக்குக் கொலை மிரட்டல் வந்ததை அடுத்து, கவுதம் கம்பீர் டெல்லி போலீஸில் புகார் உடனடியாக புகார் செய்திருக்கிறார். அதனால், போலீஸார் டெல்லியிலிருக்கும் கவுதம் கம்பீர் இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றனர். இது குறித்து கவுதம் கம்பீரின் செயலாளர் கவுரவ் அரோரா டெல்லி போலீஸாருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
கவுதம் கம்பீருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பியிருக்கின்றனர். இது குறித்து விசாரித்து தேவையான பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் டெல்லி மத்திய மாவட்ட டி.சி.பி-க்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொலை மிரட்டலை டி.சி.பி ஸ்வேதா சவுகான் உறுதிப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், ``கவுதம் கம்பீர் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுதிருப்பதாகக் கூறி எங்களை அணுகியிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு கவுதம் கம்பீரின் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.
கவுதம் கம்பீர் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை அந்த நாட்டுடன் எந்த வித உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
Also Read: `தீவிரவாதம்தான் பிரச்னை.. மக்கள் இல்லை!’ - பாக்., சிறுமிக்கு உதவியது குறித்து கம்பீர்
source https://www.vikatan.com/government-and-politics/politics/gautam-gambhir-receives-death-threats-from-terrorists
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக