`உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’
சட்டப்பேரவைத் தேர்தலின் போது `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்ற ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் தனித்துறை ஒன்றை உருவாக்கி, மக்களின் குறைகள் 100 நாள்களில் தீர்க்கப்படும் என அறிவித்தார்.
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ், பெறப்பட்ட 4 இலட்சம் மனுக்களில் 70000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது.
— M.K.Stalin (@mkstalin) May 18, 2021
549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது.
பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்! pic.twitter.com/oCBMyIMWXB
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறை உருவாக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், ``‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் கீழ், பெறப்பட்ட 4 இலட்சம் மனுக்களில் 70,000 மனுக்கள் TNeGA வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. 549 மனுக்களுக்கு முழுமையான தீர்வு காணப்பட்டிருக்கிறது. பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினேன்!” என பதிவிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/general-news/19-05-2021-just-in-live-updates
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக