Ad

புதன், 26 ஏப்ரல், 2023

Tamil News Live Today: டெல்லியில் அமித் ஷா, நட்டாவைச் சந்தித்த இபிஎஸ் - தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை!

டெல்லியில் அமித் ஷா, நட்டாவைச் சந்தித்த இபிஎஸ் - தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை!

டெல்லிக்குச் சென்றிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு சுமார் 9 மணியளவில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கர்நாடக தேர்தல், பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்தும் அங்கு பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதிமுக - பாஜக

இந்தச் சந்திப்பின்போது எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தனர். பா.ஜ.க மாநிலத் அண்ணமாலையும் இந்தச் சந்திப்பின்!போது அங்கு இருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-today-updates-dated-on-27-04-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக