Ad

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

காதல், ரிலேஷன்ஷிப் - எப்படி வேறுபடுத்தி புரிஞ்சுக்கணும்?|All About Love-4 | Visual Story

love

காதல் ஓர் உணர்வு. எமோஷன். அதில் ஹார்மோன்களின் வேலைகளும் உண்டு. கோபம், வெறுப்பு, மகிழ்ச்சி போல காதலும் ஓர் உணர்வு. அது வாழ்நாள் முழுக்கக் கூடவே வரலாம், அல்லது சூழ்நிலைகள் பொறுத்து குறிப்பிட்ட காலம் மட்டுமே இருக்கலாம்.

lovers

சுருக்கமாகச் சொன்னால், காதலென்பது அது இஷ்டத்துக்கு வந்து போகும் ஒரு எமோஷன்.

ஆனால், ரிலேஷன்ஷிப் அப்படியல்ல. அது பல விஷயங்களைச் சேர்த்து நாமே கட்டும் ஒரு பொட்டலம். காதல், கனவு, ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை, மதிப்பு, மரியாதை, எதிர்பார்ப்பு, கொஞ்சம் ஏமாற்றம், அட்ஜெஸ்ட்மென்ட் என இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கிய தொகுப்பு. 

பியார் பிரேமா காதல்

உதாரணத்திற்கு 2கே கிட்ஸ்களின் ஆதரவு பெற்ற படமான பியார் ப்ரேமா காதலில், ஹரிஷ் கல்யாணுக்கு ரைஸா மீது முதலில் வருவது காதல். அதை அவர் வெளிப்படுத்திய பின் இருவரும் ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகிறார்கள். அங்கே அது `லிவிங் டுகெதர்' வகை உறவு. 

இதயம்!

அப்படியே 30 ஆண்டுகள் பின்னோக்கி போனால் ஹரிஷுக்கு இருந்த அதே எமோஷன்தான் `இதயம்' படத்தில் முரளிக்கும். ஆனால், அதை அவர் கடைசிவரை ஹீராயினியிடம் சொல்லவே மாட்டார். அங்கே ஹீரோவும் ஹீராயினியும் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கவில்லை. 

அலைபாயுதே ஷக்தி- கார்த்திக்

அப்படியே 10 ஆண்டுகள் அங்கிருந்து தள்ளி வந்தால் `அலைபாயுதே'. அதில் மாதவனுக்கு ஷாலினியைப் பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. தன்னைத் தேடி ஊர் ஊராகச் சுற்றி தன்னிடம் வரும் மாதவனைப் பார்த்ததும் ஷாலினிக்கும் தன் காதல் புரிகிறது. உடனே தாலி கட்டிவிட்டு திருமணம் என்ற ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைகிறார்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா

இன்னும் பத்தாண்டுகள் தள்ளி வந்தால் 2011-ல் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா'. அதில் சிம்புவும் காதலிக்கிறார்; த்ரிஷாவும் காதலிக்கிறார். ஆனால், த்ரிஷாவின் சூழ்நிலையும், அவர் மனநிலையும் சிக்கலானது. அதனால் அங்கே எந்த ரிலேஷன்ஷிப்பும் சாத்தியமாகவில்லை. த்ரிஷா வேறொருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். 

இந்த 4 கதைகளிலும் இருக்கும் ஒற்றுமை காதல். வித்தியாசம் ரிலேஷன்ஷிப். ரிலேஷன்ஷிப் என்பதை காதலின் நீட்சியாகப் பார்க்கலாம். ஆனால், திருமணம் அல்லது லிவிங் டுகெதர் உட்பட எந்த ரிலேஷன்ஷிப்புக்கும் உத்தரவாதம் தரும் ஒன்றாகக் காதலைப் பார்க்கக் கூடாது. 

ஒருவர் வந்து உங்கள் மீது காதலிருப்பதாகச் சொன்னால் அதை நீங்கள் ஏற்கலாம்; உங்களுக்கும் காதலிருப்பதாகச் சொல்லலாம். இருவரும் அதை அங்கிருந்து நகர்த்தி ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் போகலாம். 

ஒருவர் தன் காதலை வெளிப்படுத்தும்போது நீங்கள் சொல்லும் பதிலும், ரிலேஷன்ஷிப்புக்கு நீங்கள் சொல்லும் பதிலும் வேறு வேறு. காதல் இருந்தாலே அங்கே ரிலேஷன்ஷிப் என்பது கட்டாயமல்ல. சூழ்நிலையால் ‘நோ’வும் சொல்லலாம்.

ரிலேஷன்ஷிப் என்பது இரண்டு தனி நபர்களுக்கு இடையே போட்டுக்கொள்ளப்படும் ஒப்பந்தம் போல. அங்கே காதல் இருக்கலாம்; அல்லது அது வெறும் ஈர்ப்பாக இருக்கலாம். ஆனால், இருவரும் ஏற்றுக்கொண்டு செய்துகொள்ளும் ஒப்பந்தம். 

காதலுக்கு ஆமாம் சொல்ல யோசிக்கத் தேவையில்லை. அதை உணர்வு ரீதியாக அணுகிவிடலாம். ஆனால், ரிலேஷன்ஷிப்புக்கு ஓகே சொல்லும் முன் யோசிக்க வேண்டியிருக்கிறது. பல காரணிகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.

யோசிக்காமல் காதலிக்கும் ஜோரிலே ரிலேஷன்ஷிப்புக்குள் நுழைந்தவர்களில் பெரும்பாலானோர் பின்னர் கஷ்டப்படுவதைத்தான் நாம் அதிகம் பார்க்கிறோம்.



source https://www.vikatan.com/ampstories/lifestyle/relationship/difference-between-love-and-relationship-visual-story

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக