Ad

வியாழன், 20 ஏப்ரல், 2023

`உங்க மாந்தோப்பில் 200 ஏக்கர் கொடுங்க..’ - கலகல துரைமுருகன்; வெற்றி விழா எடப்பாடி |சட்டசபை பிட்ஸ்

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரம் மற்றும் விவாத்ததில் அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை பலரும் கலகலப்பை அள்ளித் தெளித்தனர். அதிலும் வெற்றி விழா கொண்டாடியதாக எடப்பாடியைக் கிண்டலடித்தது, மாமர தோப்பு நிலத்தை தர சொல்லி அமைச்சர் துரைமுருகன் பேசியது அவையில்  உள்ளவர்களைக் குலுங்கி சிரிக்க வைத்தது.

அப்பாவு

’ஸ்டிரிக்ட் ஆபிஸர்’ அவைத் தலைவர்!

கேள்வி நேரத்தில் பேசிய வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினரான அமுல் கந்தசாமி, கேள்வி தொடங்குவதற்கு முன்பு அவர் கட்சி சார்ந்த தலைவர்களைப் புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்தார். அப்போது குறிக்கிட்டு  பேசிய அவைத்தலைவர் அப்பாவு, “கேள்வி மட்டும் கேளுங்க. இது கேள்விக்கான நேரம். இதுல தேவையில்லாததை பேச வேண்டாம். கேள்வி கேட்பதுனா கேளுங்க இல்லேனா உட்காருங்க ” என கடிந்து கொண்டார்.

ரைமிங் விஜய பாஸ்கர்!

 கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் விஜய பாஸ்கர் கல்வியில் பெண்கள்  சிறந்து விளங்குவதாகக் கூறினார். மதிப்பெண்கள் அதிகம் எடுப்பதிலும் முதலிடம் பிடிப்பதிலும் பெண்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். ’பெண்கள்’ அதனால் மதிப்’பெண்கள்’ அதிகமாக எடுக்கிறார்கள் என ரைமிங்கில் பேசினார்.

வானதி சீனிவாசன்

`அட அதை யாரு சொன்னா என்ன?’

முன்னாள் பிரதமரான வி.பி.சிங்-கிற்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைப்பது தொடர்பாக 110 விதியின் கீழ் அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது பாஜகவைச் சேர்ந்தவார்கள் பேச வேண்டும் என்ற சூழலில், பேசுவது நயினார் நாகேந்திரனா...வானதியா... என்னும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவை தலைவர், “வரவேற்கிறோம்னு சொல்ல போறீங்க. இதுக்கு யார் பேச போறீங்க? வானதி அம்மா பேசுறாங்களா? அப்படின்னா பேசட்டும்” என்று கூறினார்.

அப்போது அதை வரவேற்பதாக வானதி கூறிய உடன் அவைத்தலைவர் அமருமாறு கேட்டார். அதற்கு வானதி, “இரண்டு வார்த்தைகள் கூட பேசல, அதுக்குள்ள உட்கார சொல்றீங்களே. கொஞ்சம் எக்ஸ்ட்ரா பேசுகிறேன்” என்று  கேட்டுக் கொண்டதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேசி முடித்தவுடன் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், நயினார் நாகேந்திரன் நோக்கி நீங்க பேசலையா என சைகை செய்தனர். அதற்கு அவாரோ, `அமைதியாக அமர்ந்து கொள்வதுதான் நல்லது’ என்பது போல பாவனை காட்டினார்

நயினார் நாகேந்திரன்

அப்பாவிற்கு தப்பாத பிள்ளை!

 வி.பி .சிங்குக்கு முழு உருவ சிலை வருவது தொடர்பாக பேசிய அவை முன்னவர் துரைமுருகன், “வரலாற்று ரீதியில் ஒரு திட்டத்தைக் கொண்டு வருவதில் வல்லவராக இருந்தவர் கலைஞர். அதேபோல், ’அப்பனுக்கு தப்பாத குழந்தையாக தற்போதைய முதலமைச்சரும்’ வரலாற்றை நிலை நிறுத்த தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

கருணாநிதி, ஸ்டாலின்

இளையபெருமானை அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே மறந்து இருப்பார்கள். ஆனால் அவருக்கு நினைவரங்கம் கட்டுவது,  தற்போது வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை என்று அவரின் செயல்பாடுகள் கலைஞரை நினைவுபடுத்துகிறது எனப் பேசினார்.

மாந்தோப்பில் டெக் சிட்டி!

கேள்விநேரத்தில் பேசிய மாதவரம் சுதர்சனம், “சென்னை, கோயம்புத்தூர், ஓசூரில் டெக்ஸிட்டி (Tech City) அமைப்பதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். சென்னைக்கு கொண்டு வந்த அந்த ஐ.டி நிறுவனத்தை மாதவரத்துக்கு கொண்டுவர அமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

 அப்போது பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “அதுக்கு மாதவரத்தில் ஐடி பார்க் அமைப்பதற்கான இடவசதிகள் இருந்தால் முதலமைச்சருடன் கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

உடனே எழுந்த அவை முன்னவர் துரைமுருகன், ”மாதவரத்தில் ஐடி பார்க் அமைக்க வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை. ஆனால் ’இடம் இல்லை’ என அமைச்சர் சொல்கிறார். ஆனால் என்னிடம் சுதர்சனம் கூறியிருக்கிறார். அவருக்கு ஆயிரம் ஏக்கரில் மாந்தோப்பு இருக்கிறது என்று. அதில் 200 ஏக்கர் இது அமைக்கிறதுக்கு கொடுக்கிறேன்னு சொல்றாரு.. அதை அமைச்சர வாங்கிக்கணும்” என சொன்னது இது அவையில் சிரிப்பொலையை உண்டாக்கியது.

சட்டசபையில் எம்.எல்.ஏ சுதர்சனம்

இதற்கு பதிலளித்த சுதர்சனம், ``மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 400 ஏக்கர் இருக்கிறது. அதில் நிச்சியம் ஐடி பார்க் கொண்டுவர முடியும் ” என்றார். உடனே திமுக உறுப்பினர்கள் அந்த ஆயிரம் ஏக்கர் என கோரசாகக் கத்தியது அவையில் உள்ளவர்களை சிரிக்க வைதத்து.

`கலைஞரின் ‘ஃபயர் துறை’

மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று காரசார வாதம் நடந்தது. குறிப்பாக, தூத்துக்குடி  துப்பாக்கிச் சூடு, கொடநாடு வழக்கு, பல் பிடிங்கிய விவகாரம், ஆருத்ரா நிதி மோசடி என அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது எழுந்த அமைச்சர் துரைமுருகன், முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்த உள்துறையை எப்போது நெருப்புத் துறை என்பார். இப்படிதான் ஃபயராக விவாதம் நடக்கும். அதை அணைக்கத்தான் கூடவே தீயணைப்பு துறைக்கான விவாதம் நடக்கிறது என்பார்” என்றார்.

சட்டப்பேரவையில் கருணாநிதி

வெற்றி விழா - எடப்பாடி பழனிசாமி

 உள்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் கடைசியாகப் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தபோது, மானியக் கோரிக்கை விவாதத்தில் எதிர்கட்சியினர் தலைவருக்கு பேசுவதற்கு சரியக ஒரு மணிக்கு வாய்ப்பை வழங்கி விடுவோம். ஆனால் நீங்கள் மூன்று மணிக்கு தான் கொடுக்கிறீர்கள். பசி மயக்கத்தில்  இருக்கிறோம்” என கூறினார்.

அதற்கு அவை முன்னவர் துரை முருகன், “தாமதம் எங்களால் ஆகவில்லை. நீங்கள் தான் ’வெற்றி விழா’ கொண்டாடியதால் தாமதமானது  என்றதும் அவையில்  சிரிப்பொலையை உண்டாக்கியது.

சட்டப்பேரவை - எடப்பாடி - துரைமுருகன்

நான் ராஜா….எப்போதும்!!

 தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கியதை அறிந்ததும் , அவையில் நுழைந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார். உடனே, துரைமுருகனும் காலி செய்து விட்டீர்கள் என்பது போல் சைகை செய்தார். ஒபிஎஸ் இருக்கையில் அமர்ந்தது  மறைமுகமாக பன்னீர்செல்வத்திற்கு உள்ளே இடம் இல்லை என்பதை கூறுவது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்கியது.

`நாளைக்கு இருப்பீர்களா..?’ - முதல்வர் கேள்வி!

நேற்று உள்துறைக்கான  மானியக்  கோரிக்கை விவாதம் மட்டுமே நடந்தது. இன்று முதலமைச்சர் அதற்கு பதிலை வழங்குவார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர், “இது குறித்து துறைக்கான பதிலை நாளை வழங்க இருக்கிறேன். ஆனால் பதிலின் போது வெளிநடப்பு செய்யாமல் நீங்கள் இருப்பீர்களா ?...என்று தெரியவில்லை .என்பதால் தற்போது கூறுகிறேன்” என பதிலை வழங்கினார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/a-highlights-on-tamilnadu-assembly-dated-20-april

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக