Ad

திங்கள், 10 ஏப்ரல், 2023

சட்டசபை: `பாஜக, எப்போவுமே நிக்குறீங்களே...'; `காங்கிரஸா டாஸ்மாக் பத்தி பேசுறீங்க?' - கலகல அப்பாவு

சட்டப்பேரவையில் நேற்று(10-04-2023) செய்தி மற்றும் விளம்பரம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, சட்டத்துறை ஆகிய மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. அப்போது உறுப்பினருடைய பேச்சுக்கும் ஒன் மேன் ஆர்மியாக ‘அவைத்தலைவர் அப்பாவு’ கொடுத்த கவுன்டர்கள் அல்டிமேட் ரகமாக இருந்தது.

சபாநாயகர் அப்பாவு

சட்டசபையில்  ஆளுநருக்கு   எதிராக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் கொண்டுவருவதற்கு முன்னதாகவே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'இருக்கை தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுப் பேச அனுமதித்தப்பின், தி.மு.க சார்பாக  குறுக்கீடு செய்ததால் ’சட்டப்பேரவை வெளிப்படத்தன்மையுடன் செயல்படவில்லை’ எனக் கூறி அதிமுக வினர் வெளிநடப்பு செய்தனர். `நீங்கள் ஏதோ உள்நோக்கத்தோடதான் வெளியேறுறீங்க’ என 'ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்தில் அ.தி.மு.க உறுப்பினர் பங்கேற்காமல் சென்றதைச் சுட்டிக்காட்டி நக்கலடித்தார்.

அதேபோல், தனித்தீர்மானம் எண்ணிக்கணக்கு முறையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. முதலில் தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் எழுந்து நிற்க சொன்னார் சபாநாயகர். அப்போது பாஜக எம்.எல்.ஏ காந்தி தவறுதலாக எழுந்து நின்று, பின்னர் சுதாகரித்து உட்காந்தார். பின்னர், யாரு தீர்மானத்திற்கு எதிர்க்கிறார்களோ அவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றார். அப்போது தீர்மானத்தை எதிர்த்த பாஜக உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி மற்றும் சரஸ்வதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்றனர். உடனே,  அவைத்தலைவர் அப்பாவு, "என்னப்பா நீங்க எல்லாத்துக்கும் எழுந்து நிக்குறீங்களே...என கலாய்த்தது உறுப்பினர்கள் பாஜக உட்பட அனைவரையும்,  சிரிக்க வைத்தது.

தளவாய் சுந்தரம்

சட்டத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அ.தி.மு.க உறுப்பினர் தளவாய் சுந்தரம், கச்சத்தீவை மீட்டெடுக்க சட்டப்போராட்டம் நடத்த வேண்டுமென கோரினார். அவருக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்ததால், அப்பாவு போதும், ’’நன்றி சொல்லி அமருங்க’’ என்றார். அதற்கு சுந்தரம் 'இல்ல தலைவரே' எனக் கூறி யது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மேலும், தொடர்ந்தவர், "வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் அதிமுக ஆட்சியில் தான் சட்டப்பிரிவு ’162’ பயன்படுத்தப்பட்டு சட்டங்கள் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் தான் நீட் தேர்வில் ஏழை மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது நிறைய கோப்புகள் கிடப்பில் உள்ளது” எனக் கூறினார்.

இதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "எதிர்க்கட்சி உறுப்பினர் சொல்வது தீர்மானங்கள். அதற்கு அரசாணை வெளியிட்டாலே போதுமானது. ஆனால், ஆளுங்கட்சி கொண்டுவருவது சட்டமுன்வடிவுகள் அதற்கு ஆளுநர் தான் ஒப்புதல் வழங்க வேண்டும்” என்றார்.

அமைச்சர் ரகுபதி

தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக சார்பாக பெயரிடப்பட்ட ’அவ்வை சண்முகி சாலையைப் பெயர் மாற்ற’ நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்ததைக் குறித்து பேசினார். நகராட்சியில் கொண்டுவந்த தீர்மானத்தை சட்டசபையில் எப்படி விவாதிக்க முடியுமென அப்பாவு கூறினார். இதை ஏற்க மறுத்து அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட தொடங்கினர்.

அப்பாவு

இடையிலே, தளவாய் சுந்தரம், சாலையைப் பெயர் மாற்றம் செய்யக்கூடாது என்றார். அதற்கு, `உங்க பெயர் மாறாது தளவாய்னு தா இருக்கும்’ என்றார் அப்பாவு.

அடுத்ததாக சட்டத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, 'இஸ்லாமிய சிறைவாசிகள் விடுவிக்க வேண்டும்' தன் கோரிக்கைகளைக் குறிப்பிட்டு பேசினார். அப்போது, `இன்னும் மிச்சம் ஒரு நிமிடம் இருக்கு’ என அப்பாவு நினைவுப்படுத்தினார். அதற்கு ஜவாஹிருல்லா, ’’அது எதுக்கு... அப்படியே உக்காந்துக்கிறேன்” என மறைமுகமாக நேரமின்னையைச் சுட்டிக்காட்டியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன், ``பனைமர வளர்ப்பை ஊக்குவித்து கள் உற்பத்தி செய்வது தொடர்பாக தமிழக அரசு யோசிக்க வேண்டும்.” என்றவர் கேரளாவுல அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டுவருவதைச் சுட்டிக்காட்டினார்.

உடனே, அவைத்தலைவர் அப்பாவு, "காங்கிரஸ்தான் பேசுறீங்களா...கேரளாவ வேற சொல்லுறீங்களே” என்றார் நக்கலாக... அதற்கு ரூமி மனோகரோ, "திருநெல்வேலி மாவட்டத்துல பனை மரம் எண்ணிக்க அதிகம் அதனால சொன்னேன்” என்றார்.

அதற்கு அப்பாவுவோ, "எங்க விக்கனும்னு கேட்கல. மது கொள்கையில உடன்படுறீங்களானு கேட்குறேன்” என்றார். அதற்குப் பதிலளித்த ரூபி மனோகரன், "கொள்கைய தாண்டி டாஸ்மாக் விட பனங்கள் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/policy/an-interesting-happening-of-speakers-counters-over-members-in-tamilnadu-assembly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக