Ad

திங்கள், 24 ஏப்ரல், 2023

Tamil News Live Today: ஜி ஸ்கொயர்: இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறையின் ரெய்டு!

ஜி ஸ்கொயர்: இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு!

ஜி-ஸ்கொயர்

 தமிழ்நாட்டில் `ஜி ஸ்கொயர்' நிறுவனத்துக்குச் சொந்தமான, தொடர்புடைய சென்னையில், அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடக மாநிலத்தில், பெங்களூர், மைசூர், பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் என மொத்தம் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று தொடங்கிய இந்த ரெய்டு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

பாகிஸ்தான்: காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு... 13 பேர் பலி!

குண்டுவெடிப்பு

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு காவல் நிலையத்தில் நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி13 பேர் பலியாகிருக்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இது குறித்து காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத், "அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததால், அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். வெளியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்திருக்கிறோம். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது." எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/latest-tamil-news-live-updates-dated-on-25-04-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக