Ad

புதன், 26 ஏப்ரல், 2023

`பட்டினி கிடந்தால் இறைவனை காணலாம்' - ஒரே இடத்தில் கிடைத்த 58 உடல்கள், கென்யாவை உலுக்கிய சம்பவம்

கென்யாவின் கடற்கரை நகரமான மாலிண்டியை சேர்ந்தவர் பால் மெக்கன்சி. இவர், அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குறிப்பிட்ட மதத்தின் தலைவராக இருந்து வருகிறார். இவரது பண்ணையில் உள்ள பலரும் மெலிந்து காணப்பட்டு, அதில் 4 பேர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பிறகு உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் போலீஸை சென்றடைய, அப்போது தொடங்கியது பரபரப்பு. மெக்கன்சி பண்ணையில் உள்ளவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கென்யா

உணவு உண்ணாமல் பட்டினியாக இருந்தால் இறைவனை சந்திக்கலாம் என மெக்கன்சி கூறியதால், அப்பகுதியை சேர்ந்த பலரும் அதை பின்பற்றியதாகவும் இதனால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பால் மெக்கன்சி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, ஷகாஹோலா காட்டுப் பகுதியில் உள்ள கல்லறையில் போலீஸார் நடத்திய தேடுதலில் சுமார் 58 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர், மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருந்து தற்போது அவர்களின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடல்கள் கிடைத்த 800 ஏக்கர் பரப்பளவிலான காட்டுப்பகுதி சீல் வைக்கப்பட்டு குற்றப் பகுதியாக அறிவித்துள்ளது கென்யா உள்துறை அமைச்சகம். “அப்பாவிகள் உயிரிழந்த இந்தக் கொடூர சம்பவங்களுக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். இனி அனைத்து மத தலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும்” என கென்யா அமைச்சர் கித்தூர் கிண்டிகி கூறியுள்ளார்.

பால் மெக்கன்சி

காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட உடல்களில் வெள்ளை நிற பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருந்தது. மேலும் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்த சோதனையின் முடிவில்தான் இறந்தவர்கள் உண்மையாக எதற்கு இறந்தார்கள் என்ற காரணம் தெரியவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/crime/58-bodies-found-in-investigation-into-starvation-cult

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக