Ad

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

Titanic: முட்டை, மட்டன் சாப்ஸ், டர்கி ரோஸ்ட் - இணையத்தில் வைரலாகும் டைட்டானிக் கப்பலின் மெனுகார்டு!

பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்களை காதல் கடலில் மூழ்கடித்த திரைப்படம் ‘டைட்டானிக்’.

Titanic Movie

ஆஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இத்திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என மொத்தம் 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதமாக புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியானது.

Titanic

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரம் கணக்கான பயணிகளோடு தொடர்ந்தது டைட்டானிக். பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சோகமான சம்பவத்தை மையப்படுத்திதான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியிருந்தார்.

882 அடி நீளம், 92.5 அடி அகலம் கொண்ட டைட்டானிக் கப்பலின் 111வது நினைவு தினம் ஏப்ரல் 15 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் டேஸ்ட் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான அன்றிரவு பயணிகளுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனுகார்டு பகிரப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு பயணிகளுக்கு  மட்டன் சாப்ஸ், சிக்கன், டர்கி ரோஸ்ட், கஸ்டர்ட் புட்டிங், இறால், பலவிதமான சீஸ் உணவு வகைகள் வழங்கப்பட்டுள்ளன.  இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் போன்றவையும், மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு பால், முட்டை, ஓட்மீல் போரிட்ஜ், ப்ரெட், பட்டர், மர்மலேட் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.    



source https://www.vikatan.com/trending/viral/titanic-ship-food-menu-goes-viral-on-the-internet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக