Ad

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

Dhoni : `நீ..நீயா இரு!' - ரஹானேவிற்கு தோனி சொன்ன அட்வைஸ்

மும்பைக்கு எதிரான போட்டியில் மிகபெரிய சர்ப்ரைஸை கொடுத்து அசத்தியிருக்கிறார் சிஎஸ்கேவின் ரஹானே. ஃபார்ம் அவுட் ஆகி பல அணிகளிலிருந்தும் ஒதுக்கப்பட்டவர் சிஎஸ்கேவில் அரிதாக கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு அதிரடி காண்பித்திருக்கிறார். இந்தப் போட்டியில் ரஹானேவிற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது? ரஹானேவுக்கு தோனி என்ன அட்வைஸ் சொன்னார்? என்பது போன்ற விஷயங்களை அவர்களே பகிர்ந்திருக்கிறார்கள்.
Rahane

சென்னை அணி வெற்றிப் பெற்றவுடன் ரஹானேவை மட்டும் அப்படியே அலேக்காக தனியாக அள்ளி வந்து பேட்டியெடுத்தார்கள். அதில் அவர், 'துரதிஷ்டவசமாக மொயின் அலியால் இந்தப் போட்டியில் ஆட முடியவில்லை. அதனால் டாஸூக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் நான் அணியில் இருக்கிறேன் எனும் செய்தி எனக்கு சொல்லப்பட்டது. ஐ.பி.எல் மாதிரியான பெரிய தொடரில் எப்போது வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் எதற்கு தயாராகத்தான் இருந்தேன். என்னுடைய ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நானே கற்பனை செய்து மனதில் ஓட்டிப் பார்த்துக் கொள்வேன். களத்தில் அதை நடைமுறைப்படுத்துவதுதான் என்னுடைய வேலை.' என்றார். அப்படியே இந்தப் பேட்டியை முடித்த கையோடு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் வந்தார். அங்கே

Rahane
'சிஎஸ்கேவின் அணிச்சூழலையும் அவர்கள் ஒவ்வொரு வீரரையும் எப்படி கையாள்வார்கள் என்பதை பற்றியும் நிறைய வீரர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் அதையெல்லாம் நேரில் அனுபவிக்கிறேன். சிஎஸ்கே ஒரு குடும்பத்தைப் போன்றது. தொடர் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே நாங்கள் பயிற்சியை தொடங்கிவிட்டோம். அப்போதே நீங்கள் உங்களின் இயல்பான ஆட்டத்தை ஆடுங்கள். வேறு எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் தோனி சொன்னார். நானும் யாரை போன்றும் ஆட விரும்பவில்லை. ரஹானே ரஹானேவாகவே இருக்க விரும்புகிறேன். அதற்கான சுதந்திரம் இங்கே கிடைக்கிறது.'
Dhoni

ரஹானே பற்றி தோனி பேசுகையில், 'ரஹானே அடிக்கடி பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடிய வீரர் கிடையாது. ஃபீல்டர்களை ஏமாற்றி நல்ல டைமிங்கில் பவுண்டரிக்களை அடிக்கக் கூடியவர்.

அவரை அவருடைய இயல்பான ஆட்டத்திலேயே கவனம் செலுத்த சொன்னோம். வேறேந்த அழுத்தங்களையும் எடுத்துக் கொள்ளாமல் அனுபவித்து ஆடுங்கள். நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றேன்'

என தோனி ரஹானே குறித்து பேசியிருந்தார்.



source https://sports.vikatan.com/cricket/ipl-2023-dhoni-about-rahanes-comeback-innings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக