பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவைபோன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.
அன்பார்ந்த வாசகர்களே!
உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.
பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த் தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப் பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க 5 ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.
தடைகளை நீக்கும்
மாமரத்து
சுயம்புவிநாயகர்
திருக்கோயில்
கூடுவாஞ்சேரி சென்னை.
செல்வகடாட்சம்
அட்சயமாய் பெருகிட
அருள் செய்யும்
ஸ்ரீஅட்சய வரதர்
திருக்கோயில்
ஆட்சிபாக்கம் திண்டிவனம்
ஆரோக்கியம்
அருளும்
தோரணமலை
ஸ்ரீமுருகன் கோயில்
தென்காசி மாவட்டம்
தம்பதி ஒற்றுமை,
இல்லறம் நல்லறமாக
அருளும் ஞானமலை
முருகன் கோயில்
ராணிப்பேட்டை மாவட்டம்
நீண்ட ஆயுள்,
மாங்கல்ய பலம்,
மங்கல வரங்கள் அருளும்
ஸ்ரீமங்கலநாதர்
திருக்கோயில்
திண்டிவனம்
வரும் 18.4.23 முதல் மே 1-ம் தேதி வரையிலுமான பதிவுக்கு பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 14.4.23
source https://www.vikatan.com/spiritual/gods/wishes-to-readers-in-20th-anniversary-of-sakthi-vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக