இந்திய முதலீட்டு உலகில் புதிய அலையொன்று வீசிக்கொண்டிருக்கிறது! அதுதான் 'கிரிப்டோகரன்சி (Cryptocurrency) அலை. பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ், கடன் பத்திரம், தங்கம் என்று பயணித்துக்கொண்டிருந்த இந்திய முதலீட்டாளர்களின் சமீபத்திய பார்வை, குறிப்பாக இளைஞர்களின் கவனம் கிரிப்டோகரன்ஸி பக்கம் திரும்பக் காரணம் உலகம் தழுவிய அதன் அபரிமிதமான வளர்ச்சி! கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைக்கு வங்கிகள் துணைபுரியக்கூடாது என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மார்ச் 2020-ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கிரிப்டோகரன்ஸி எக்ஸ்சேஞ்களின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது!
ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளை ஹேக்கர்கள் ஹேக் செய்துவிடக்கூடாது என்பதற்காக 'என்கிரிப்ஷன்' முறையில் பணமானது ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்குப் பரிமாற்றப்படுகிறது. இதற்குப் பயன்படும் தொழில்நுட்பம்தான் 'பிளாக் செயின் (Block Chain)'. உதாரணமாக உங்களின் பணத்தை ஒரு லாக்கரில் வைப்பதற்குப் பதிலாக 100 லாக்கரில் பிரித்து வைத்துள்ளீர்கள் எனக் கொள்வோம். ஒரு லாக்கரைத் திறக்க மற்ற 99 லாக்கர்களின் சாவியும் தேவை என்றால், மொத்த பணத்தையும் திருடுவது சிரமமாக இருக்குமல்லவா? இதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் சிறப்பு.
உங்களின் வங்கி விவரங்கள் அனைத்தும் பல நீளமான சங்கேதக் குறியீடுகளாக, ஒரே நெட்வொர்க்கின் கீழுள்ள பல கணினிகளில் பகிரப்படுகிறது. அனைத்து கணினிகளையும் ஒரே நேரத்தில் ஹேக் செய்வது இயலாத காரியம். இதேபோலத்தான் கிரிப்டோகரன்ஸிகளும். நீண்ட வரிசைமாற்றங்களைக் கொண்ட, தனித்துவமான எண்களால் ஆனவை அவை. ஒவ்வொரு கிரிப்டோகரன்ஸியின் தகவலும் அவற்றை வாங்கியுள்ள பல்வேறு நபர்களின் கிரிப்டோகரன்ஸிக்களுடன் இணைந்து இருப்பதால், அதனை ஹேக் செய்வது முடியாத காரியமாக பார்க்கப்படுகிறது!
வரி கிடையாதா!
பிட்காயின், எதெரியம், ஸ்டெல்லார் என்று ஏகப்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் உலகமெங்கும் பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. அன்றாட கரன்ஸிகளுக்கு மாற்றாக, பணத்தை பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய முடிவது இதனால் சாத்தியம் என்றாலும், அரசுகளின் முதலீடு/பணப் பரிவர்த்தனை சார்ந்த நெறிமுறைகளுக்குக் கீழ் இவை வருவதில்லை. அதனால் கிரிப்டோகரன்ஸியை, முறையான முதலீடாக அல்லாமல் அதை ஒரு டிஜிட்டல் சொத்து (Digital Asset)-ஆக மட்டுமே கருத வேண்டியுள்ளது.
கோடிக்கணக்கான இந்தியர்கள் ஏற்கெனவே பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்ஸிகளில் முதலீடு செய்துள்ளனர். 2009-ன் போது 1 பிட்காயினின் மதிப்பு ஒரு டாலர், 2021-ல் 1 பிட்காயினின் மதிப்பு 42,000+ டாலர்கள், கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய்! டிமான்ட் அதிகம் இருப்பதால் பிட்காயின் மீது லட்சக்கணக்கானோர் முதலீடு செய்யப்போய், அதன் மதிப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது. மதிப்புமிக்க இந்த பிட்காயினை வடிவமைத்தவர் யார் என்பதெல்லாம் கட்டுக் கதையாகவே இருக்கிறது. அதனால் டிமான்ட் உள்ளவரை இதன் ஆதிக்கம் இருக்கும் பின்னர் அதன் வீழ்ச்சி சாத்தியம் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது.
கிரிப்டோகரன்ஸிகளை அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை, ஆனால் மறுத்துவிடவுமில்லை. நாளைய உலகின் முக்கிய பரிவர்த்தனைப் பொருளாக பயன்படுவதற்கு வாய்ப்புள்ளதால், கிரிப்டோகரன்ஸி பரிவர்த்தனைகளை நெறிமுறையுடன் நடத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆலோசனையில் இறங்கியுள்ளன. இதுவரை பிட்காயின் மூலம் சம்பாதித்த பணத்துக்கு எந்தவித வரியும் கிடையாது, நெறிமுறைகளை அரசு அறிவிக்கும்போதிலிருந்து, கிரிப்டோ மூலம் கிடைக்கும் ஆதாயத்துக்கு வரிப்பிடிப்பு இருக்க வாய்ப்புண்டு.
உலகின் முதல் நெறிமுறைக்குட்பட்ட PNP காயின் அறிமுகம்!
ஹாங்காங்கை மையமாகக்கொண்டு செயல்படும் 'ஹீலியோஸ் வெல்த் மேனேஜ்மென்ட் (Helios Wealth Management) நிறுவனம்' உலகிலேயே முதன்முறையாக நெறிமுறைக்குட்பட்ட கிரிப்டோகரன்ஸியாக தங்களின் 'PNP' காயினை அறிவித்துள்ளனர். கடந்த மே மாதம், 10 ரூபாயாக இருந்த PNP காயினின் மதிப்பு தற்போது ரூ. 20 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய நினைத்தால் டிமான்ட் அதிகரிக்கும், இதனால் PNP காயினின் மதிப்பு பிட் காயினைப் போலவே மிதமிஞ்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் 60 லட்சம் காயின்களை மட்டுமே இப்போது சந்தையில் விட இருக்கிறது ஹீலியோஸ். மேலும், ஒருவர் குறைந்தபட்சம் 1000 காயின்கள் முதல் அதிகபட்சம் 50000 காயின்கள் மட்டுமே வாங்க முடியும் என்று ஒரு நெறிமுறையை வகுத்துள்ளது. இதனால், அனைவரும் இதில் முதலீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
PNP காயினில் முதலீடு செய்யப்படும் பணம், பலதரப்பட்ட வியாபார முதலீடுகளுக்குப் பயன்படுகிறது. அந்தந்த வியாபாரங்களின் வளர்ச்சியைப் பொறுத்து, PNP காயின்களைத் தங்களின் டிஜிட்டல் வாலெட்டில் வைத்துள்ளவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் ஹீலியோஸ் தெரிவிக்கிறது. மே 2022-ல் PNP காயின், கிரிப்டோ டிரேடிங் எக்ஸ்சேஞ்களில் விடப்படும் என்று ஹீலியோஸ் தெரிவித்துள்ளது. 2023-ல் பிட்காயினின் 1% சந்தை மதிப்பை PNP எட்டும் என்று நம்பப்படுகிறது.
கிரிப்டோகரன்ஸிகளை வாங்குபவர்களின் ஆதார் எண், பான் கார்டு எண், வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இ-சிக்னேச்சர் செய்தபின்னரே PNP காயினை வாங்க முடியும் என்பதால், இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் நெறிமுறைக்குட்பட்டவையாக இருக்கும் என்கிறது ஹீலியோஸ். இதனால் முறையற்ற பணப் பரிவர்த்தனை, கருப்புப் பணத்தை முதலீடு செய்வது போன்றவை தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2021 வரை 'Initial Coin Offering '
நிறுவனங்கள் IPO வெளியிடுவது போல, தங்களது Initial Coin Offering (ICO) அக்டோபர் 7, 2021 காலை 11 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஹீலியோஸ். விருப்பமுள்ளவர்கள் https://ift.tt/3BaRyEw என்கிற வலைத்தளத்தில் பதிவு செய்து PNP காயினை வாங்க முடியும்.
PNP காயின் வாங்கியதற்குச் சான்றாக, ஃபிஸிக்கல் காயின் (Physical Coin) மற்றும் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படக் கூடிய, வாடிக்கையாளரின் பெயர் கொண்ட கிரிப்டோ கார்டு (Crypto Card)-ஐ ஹீலியோஸ் நிறுவனம் அவரவரின் வீடுகளுக்கே டெலிவர் செய்கிறது.
PNP காயினின் நம்பகத்தன்மை மற்றும் செயல்படும் முறை குறித்து மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா? அழைக்கவும்: 044 6102 2070
பொறுப்புத்துறப்பு: பிற முதலீடுகளைப்போல கிரிப்டோகரன்ஸி முதலீடும் அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீட்டாளர்கள் பணப் பரிவர்த்தனை செய்யும் முன் ஆஃபர் தொடர்பான ஆவணங்களைப் படித்துப் புரிந்துகொண்டு, பின்னர் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
source https://www.vikatan.com/sponsored/sponsor-content/worlds-first-regulated-cryptocurrency-pnp-coin
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக