ராஜஸ்தான் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டி ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி பாகிஸ்தான் எல்லையை தாண்டிவிடுவதுண்டு. இதற்காக மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. பார்மர் மாவட்டத்தில் உள்ள குமரோன் என்ற கிராமத்தில் வசிப்பவர் ஜெம்ரராம். 12-ஆம் வகுப்பு இவரது கிராமம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஜெம்ரராம் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி இரவு தனது காதலியை பார்க்கப் புறப்பட்டார். அவரது பெற்றோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி காதலியைப் பார்க்கச் சென்றார். காதலியைப் பார்க்கச் சென்றவர் கோபத்தில் பாகிஸ்தான் எல்லைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த வேலியை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிட்டார். பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் இருந்த தோட்டத்தில் படுத்து உறங்கிவிட்டார். காலையில் பாகிஸ்தான் கிராமவாசியைப் பார்த்து அவரை பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைத்தார். தற்போது அவர் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஜெம்ரராம் சகோதரர் சுக்தர்ராம் கூறுகையில், ``கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி காதலியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றான்.
Also Read: `பின் லேடனை தியாகி எனப் புகழ்ந்த இம்ரான் கான்!' - வாய்தவறிக் கூறிவிட்டதாக பாகிஸ்தான் விளக்கம்
அதன் பிறகு வரவில்லை. 10 நாள்கள் கழித்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் வந்து ஜெம்ரராம் பாகிஸ்தான் எல்லையைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்துவிட்டு சென்றனர். 11 மாதம் கடந்துவிட்ட நிலையில் அந்த வாலிபர் பாகிஸ்தான் சிறையிலிருந்து தனது சகோதரனுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அக்கடிதத்தைப் பார்த்து அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடிதத்தில் தனது தண்டனை விரைவில் முடிந்துவிடும் என்றும் விரைவில் ஊருக்கு வருவேன்" என்று குறிப்பிட்டுள்ளார். நான் செய்த காரியத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருப்பதை உணர்வேன். கோபத்தில் பாகிஸ்தான் எல்லையை கடந்துவிட்டேன். என்னை இரவில் யாரும் கவனிக்கவில்லை. மின் வேலியில் மின்சாரமும் இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த ஒரு கிராமத்தில் உறங்கிவிட்டேன். காலையில் பாகிஸ்தான் வீரர்கள் என்னைக் கைது செய்துவிட்டனர் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
source https://www.vikatan.com/news/india/letter-from-a-rajasthani-student-who-crossed-the-border-into-pakistan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக