சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும் கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதே போன்ற சார்ஸ் கொரோனா எஸ் என்ற வைரஸை செயற்கையாக உருவாக்கி, மூன்றாம் உலக போர் மூளும் போது ஆயுதமாக பயன்படுத்தலாம் என சீன ராணுவமும், விஞ்ஞானிகளும் விவாதம் நடத்தியதாக தற்போது ஆஸ்திரேலியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தனது கொடூர முகத்தை காட்டி வருகிறது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு செய்திகள் வந்திருந்தாலும், இது சீன அரசால் திட்டமிட்டு பரப்பப்பட்ட வைரஸ், மூன்றாம் உலக போர், சீனா நிகழ்த்தும் பயோவார் என சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் குற்றம் சாட்டினர்.
இதுவரையிலும் இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசு மறுத்து வருகிறது. ஆனால் இவையாவும் உண்மை எனவும், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு சார்ஸ் கொரோனா எஸ் என்ற வைரஸை தனது எதிரி நாடுகளுக்கு மட்டுமன்றி, தங்களுடன் போர் தொடுக்கும் நாட்டிலும் பரவ விடலாம், இந்த வைரஸை ஒரு உயிரி ஆயுதமாக பயன்படுத்தலாம் என சீன அரசு ராணுவமும், பொது சுகாதார துறையும், விஞ்ஞானிகளும் திட்டமிட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிகாரி பீட்டர் ஜென்னிங்ஸ், ஊடகத்திடம் கூறியிருப்பதாவது, ``சீனாவில் ராணுவமும், சுகாதார துறையும் இணைந்து திட்டமிட்ட இந்த ஆவணத்திற்கு 'இயற்கையாக அல்லாமல் மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட சார்ஸ் மற்றும் புது வகையான வைரஸ் மூன்றாம் உலக போர் மூளும் சமயத்தில் பயன்படுத்தவிருக்கும் உயிரி ஆயுதம் குறித்தான உரை ' என பெயரிட்டுள்ளனர்.
மேலும் சீன விஞ்ஞானிகள் கொரோனா நோய் தொற்று பரவுதலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே சார்ஸ் கொரோனா வைரஸ்களை ஆயுதமயமாக்குவது பற்றி விவாதித்துள்ளனர். இது மிகவும் முக்கியமானது என கருதுகிறேன், ஏனென்றால் இதனை எவ்வாறு பயன்படுத்துவது, எங்கு பயன்படுத்துவது என்பது வரை அவர்கள் யோசித்துள்ளனர். மேலும் இவை பரப்பப்படும் போது இயல்பாக இருக்க வேண்டும், நம்மை யாரும் சந்தேகித்திட கூடாது, சந்தேகித்தாலும் அவற்றை மறுத்திட வேண்டும் என விவாதித்துள்ளனர். அது செயற்கையாக உருவாக்கம் செய்யப்பட்டது போன்று இருக்க கூடாது எனவும் இயற்கையாக பரவியது போன்று இருக்கமளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டதாம்” என ஜென்னிங்ஸ் கூறுயுள்ளார்.
ஆஸ்திரேலியா ஊடகம் வெளியிட்டுள்ள இந்த செய்தியினால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/general-news/is-china-probed-weaponizing-corona-viruses-in-2015-reports-says
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக