தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையிடன் தொடங்கிய் ஐந்த கூட்டத்தொடரில், இன்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடிக்கும் அதிகமான பயிர்க் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார்.
கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்ட முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
`உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து”
விளக்கம்: உழவு செய்ய முடியாமல் உயிர்வாழ்கின்றவர்கள் எல்லோரையும் தங்குவதால், உழவு செய்கின்றவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.
முதல்வரின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/12410-crore-agricultural-loan-waiver-chief-ministers-announcement
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக