கர்ப்ப காலத்தில் லெகின்ஸ் அணியலாமா?
- சுபத்ரா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.
``கர்ப்பகாலத்தில் எப்போதாவது ஒருசில நாள்களில் லெகின்ஸ் அணிவதில் பிரச்னையில்லை. ஆனால் அது மிகவும் டைட்டாக இல்லாமலிருப்பது பாதுகாப்பானது. அடிக்கடியும் நீண்ட நேரமும் லெகின்ஸ் அணிவதால் சிலருக்கு இடுப்புப்பகுதியைச் சுற்றி வலியும் அசௌகர்யமும் ஏற்படலாம். கால்களில் தசைப்பிடிப்பு, வெரிகோஸ் வெயின்ஸ் பாதிப்பு போன்றவையும் வலியும் வரலாம். காட்டன் அல்லாத மெட்டீரியலில் தைக்கப்பட்ட லெகின்ஸ் என்றால் வியர்வையின் காரணமாக `கேண்டிடா' என்ற சொல்லப்படும் ஈஸ்ட் இன்ஃபெக்ஷன் அடிக்கடி வரலாம்.
Also Read: Doctor Vikatan: மாதம்தோறும் அதிக ப்ளீடிங்; கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வா?
லெகின்ஸ் என்றில்லை, மேல் வயிற்றை இறுக்கும்படியான எந்த உடையும் கர்ப்ப காலத்துக்கு ஏற்றதல்ல. வயிற்றைக் கவ்விப்பிடிக்கும்படியான இந்த உடைகளைத் தொடர்ந்து அணியும்போது குறைப்பிரசவ வலி வரவும் வாய்ப்பிருப்பதாக சில ஆய்வுகள் சொல்கின்றன.
எனவே கர்ப்ப காலத்தில் உங்களுக்கு அணிய வசதியான உடைகளையே பயன்படுத்தவும். லெகின்ஸ் அணிவது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது.
Also Read: Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் யூரினரி இன்ஃபெக்ஷன்; தாம்பத்ய உறவுதான் காரணமா?
ஆனாலும் அது தரும் அசௌகர்யம் அந்த நாள்களில் தேவையற்றது. கர்ப்ப காலத்தில் உங்கள் இயக்கத்தைத் தடைசெய்யாத வகையில் சற்று தளர்வான உடைகளை அணிவது சிறந்தது."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
source https://www.vikatan.com/health/healthy/can-pregnant-women-wear-leggings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக