Ad

வெள்ளி, 11 செப்டம்பர், 2020

கிளாடியேட்டர் ஷூஸ், லினன் ஓவர் லே... கமலின் `செம கூல்' பிக்பாஸ் லுக் சீக்ரெட்ஸ்!

பிக்பாஸ் தமிழ் 4-வது சீஸனுக்கான கவுன்ட் டௌன் தொடங்கிவிட்டது. புரொமோ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் கமலின் உடைகள் கவனம் பெறுகின்றன. போன சீஸனைப் போலவே இந்த சீஸனிலும் கமலுக்கு உடைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் அம்ரிதா ராம். இதற்கு முன் ஸ்ருதி ஹாசன், துல்கர் சல்மான் என நிறைய பிரபலங்களுக்கு ஸ்டைலிஸ்ட்டாகப் பணியாற்றியவர். அவரிடம் கமலின் நியூ லுக் பற்றிப் பேசினோம்...

Kamal Haasan

``கமல் சாரோட நியூ லுக் பற்றி நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வருது. கமல் சார் விரும்பியதை நான் பண்ணிக்கொடுத்திட்டேன்னு நினைக்கிறேன்" - படபடவென பேச ஆரம்பிக்கிறார் அம்ரிதா ராம்.

``ஸ்டைலிஸ்ட் தன்னுடைய முழு கற்பனைத்திறனையும் வெளிப்படுத்தி ஒரு தோற்றத்தை வடிவமைக்கணும்னா, அதுக்கு அந்த ஆடைகளைப் பயன்படுத்தப் போகும் நபரின் ஒத்துழைப்பு ரொம்ப முக்கியம். கமல் சார் எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். என்னுடைய கிரியேட்டிவிட்டியை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் கொடுத்தார்.

Kamal Haasan

எந்த மாதிரியான அவுட்லுக் வேணும்னு, சார்கிட்ட கேட்டப்போ, ``என் உடை எனக்கு எந்த எரிச்சல் உணர்வையும் தராம வசதியா இருந்தா போதும்... உங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் நான் தயார்"னு சொன்னார்.

கமல் சாரை ஏற்கெனவே பல கெட்டப்களில் பார்த்த மக்களை திருப்திப்படுத்த நிறைய மெனக்கெடணும். பிரின்ட் ஆன் பிரின்ட் ட்ரென்ச், அப்பு கேரக்டரில் சார் பயன்படுத்திய ஷோல்டர் சஸ்பெண்டர்னு நிறைய மாடல்களை முயற்சி செய்தோம். எல்லாத்துக்கும் கமல் சார் சப்போர்ட் பண்ணாலும், முழுமையான ஒரு ஃப்ரெஷ் லுக் கொடுக்கணும்னு நான் நிறைய யோசிச்சேன்.

amritharam and kamal

அப்போதான் கமல் சார் ஒரு விஷயம் சொன்னார். ``நான் நடிச்ச படங்களின் கதாபாத்திரமாக நான் வாழ விரும்பல... நான் கமல்ஹாசனாகவே இருக்க விருப்பப்படுறேன்"னு சொன்னார். ரியல் கமல் சாரைதான் எங்க புரொமோவில் பார்த்திருப்பீங்க. லாக்டெளன் நேரத்தில் சார் இருந்த சால்ட் அண்ட் பெப்பர் ஹேர், பியர்டு லுக்கிலேயே ஸ்டைலிங் பண்ணலாம்னு முடிவுக்கு வந்தேன்.

இந்த புரொமோ வீடியோ லாக்டெளன் நேரத்தில் எடுக்கப்பட்டதால், முதலில் கமல் சாரோட கலெக்ஷனிலிருந்தே சில ஆடைகளைத் தேர்வு செய்து போட்டோஷூட் செய்தோம். இந்த சீஸனில் சார் அணியும் ஆடை லேயரிங் கான்செப்டில் வித்தியாசமான நிறங்களில் இருப்பது போன்ற லுக்கில் டிசைனிங் பண்ணேன்.

Kamal Haasan

ஷூ, வாட்ச் போன்ற அக்ஸஸரீசிலும் நிறைய கவனம் செலுத்தினேன். சாரோட கலெக்‌ஷனிலிருந்த வின்டேஜ் டைப் வாட்ச்சைப் பயன்படுத்தினோம். காலணிகளைப் பொறுத்தவரை ரோமன் கிளாடியேட்டர்ஸ் முறையை ட்ரை பண்ணிருக்கோம்.

லினன் மெட்டீரியலில் சீக்கிரமே சுருக்கங்கள் விழுந்து கசங்கிடும் என்பதால், ரியாலிட்டி ஷோவில் செலிபிரிட்டீஸ் அந்த மெட்டீரியலை விரும்ப மாட்டாங்க. ஆனா, புரொமோவில் சார் அணிந்திருந்த ஓவர் லே, லினன் மெட்டீரியல்தான். இப்படி ஒவ்வோர் ஆடையிலும் ஒரு தனித்துவம் இருக்கு.

எந்த ஆடையா இருந்தாலும் ரெண்டு மூணு கலரில் மிக்ஸ் மேட்ச் செய்து எடுத்துட்டுப் போவேன். சார் ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் ஒரு மார்க் போட்டு வெச்சுருப்பார். ஆனா, வெளியில் சொல்ல மாட்டார். கடைசியா நான் பேசி முடிச்சதும் ஒப்பீனியன் மட்டும் கொடுப்பார். கமல் சார்கூட வேலை பார்த்ததில் நிறைய புது விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இப்போ அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு தயாராகிட்டு இருக்கோம். கமல் சாரை இந்த சீஸன் முழுக்க செம கூல் லுக்கில் பார்ப்பீங்க" என்று ஆர்வம் கிளப்புகிறார் அம்ரிதா ராம்.



source https://www.vikatan.com/fashion/fashion/fashion-stylist-amritha-ram-speaks-about-kamal-haasans-new-look-for-bigg-boss-tamil-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக