Ad

புதன், 30 செப்டம்பர், 2020

"ஜெயிக்காமலேயே பொறுப்புக்கு வந்துடணும்னு மனோபாலா நினைக்கிறார்!" - டிவி சங்க சர்ச்சை

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா மீது, துணைத்தலைவர் மனோபாலா, செயலாளர் ரிஷி உள்ளிட்ட சக நிர்வாகிகள் நேற்று ஊழல் புகார் கூறியிருந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் சென்னை விருகம்பாகத்திலுள்ள சங்க அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவே, "பொதுக்குழுவுக்கு மட்டுமே என்னை நீக்கும் அதிகாரமுண்டு; மற்றபடி யாரும் நீக்க முடியாது" என ரவி வர்மாவிடமிருந்து உறுப்பினர்கள் பலருக்கும் வாட்ஸ்அப் தகவல் பறந்துள்ளது.

ரவி வர்மாவிடம் பேசினோம்.

ரவி வர்மா

"மனோபலா சீனியர். அவர்மீது மிகுந்த மரியாதை வச்சிருக்கேன். ஆனா அவர் எங்க பக்கமும் பேசிக்கிட்டு, அந்தப் பக்கமும் பேசிட்டிருக்கார். கடைசியா நடந்த அவசரப் பொதுக்குழுவுல எல்லாப் பிரச்னையையும் வருகிற டிசம்பர் மாசம் நடக்க இருக்கிற பொதுக்குழுவுல பேசிக்கலாம். அப்ப பொதுக்குழு என்ன சொல்லுதோ, அதுப்படி நடக்கலாம்னு முடிவெடுத்தப்ப அவரும் இருந்தார். அன்னைக்குச் சரின்னு தலையாட்டிட்டு, இப்ப எல்லாரையும் தப்பா வழிநடத்திட்டு வர்றார்.

எல்லா சங்கத்துலயும் பொறுப்புல இருக்கணும்னு அவருக்கு ஆசை இருக்கலாம். அதுக்கு தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வரணும். இந்த மாதிரி தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தைக் கலைச்சு குறுக்கு வழியில வரணும்னு நினைக்கக் கூடாது.

கடந்த தேர்தல்ல நான்கு அணியாப் போட்டியிட்டோம். அதுல ரிஷி, போஸ் வெங்கட் அணியில் போட்டியிட்டவர். ஆனாகூட அவரை செயற்குழு பொறுப்புச் செயலாளரா தேர்ந்தெடுத்தப்ப நான் ஏத்துக்கிட்டேன். எல்லாரையும் அரவணைச்சுப் போகணும்னுதான் நான் விரும்பறேன். ஆனா ரிஷி வந்தவுடனேயே தன்னுடைய அதிகாரம் பத்தித் தெரியாம, நான் சங்கத்துல இருந்து நீக்கி வச்சிருந்த சில உறுப்பினர்களை என் சம்மதமில்லாம மறுபடியும் சேர்த்திருக்கார். பொருளாளர் ஜெயந்த் சங்கத்துக்குச் செலுத்த வேண்டிய பணம் சில லட்சங்கள் இருக்கு. வர்ற பொதுக்குழுவுக்கு, முன்னாடி அந்தப் பணத்தைக் கட்டணும். என்னை நீக்கிட்டா அந்தப் பணம் பத்தி யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைக்கிறார். அதனாலதான் மனோபாலா பக்கம் அவர் நிற்கிறார்.

மனோபாலா

மனோபாலா, ரிஷி, ஜெயந்த்... இப்படி ஒரு ஏழு பேர் சேர்ந்துகிட்டு டிவி சங்கமே உடைஞ்ச மாதிரி ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்றாங்க. ஆனா சங்க நிர்வாகிகள்ல பெரும்பாலானோர் எனக்கு ஆதரவாத்தான் இருக்காங்க'' என்கிறார் ரவிவர்மா.

ரவி வர்மா அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தே நீக்கப் பட்டுவிட்டதால், அவர் சங்க அலுவலகத்துக்கு வரக்கூடாது என்பது மனோபாலா உள்ளிட்டவர்களின் கோரிக்கை.

Also Read: பணமோசடி... பொங்கிய மனோபாலா... உடைந்தது டிவி நடிகர் சங்கம்!

ஆனால், 'நான் டிவி சங்க அலுவகம் செல்வதை யாராலும் தடுக்க முடியாது' என்றபடி நேற்று காலையிலேயே சங்க அலுவலகம் வந்துவிட்டார் ரவி வர்மா. இருதரப்புப் பஞ்சாயத்திலும் சிக்க விரும்பாத சங்க மேலாளர் விடுமுறையில் சென்று விட்டார். ரவி வர்மாவை சங்கத்துக்குள் நுழையவிடாமல் தடுக்க நினைத்த மனோபாலா அணியைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகளும் சங்க அலுவலகம் முன் திரள, அங்கு கைகலப்பு நிகழும் அறிகுறி தென்பட்டதால் விவகாரம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றது. காவலர்கள் சிலர் ரோந்து வந்து நிலைமையைக் கண்காணித்து, அப்போதைக்குப் பதற்றத்தைத் தணித்துள்ளனர்.

ரிஷியிடம் பேசினோம்.

ரிஷி

"நாங்க எடுத்த எல்லா நடவடிக்கைகளுமே சட்டத்துக்கு உட்பட்டவைதான். ரவி வர்மாதான் ரௌடியிசம் பண்ணிட்டு இருக்கார். ஒரேயொரு பெண் ஊழியர் தனியா இருக்கிற சங்க அலுவலகத்துக்குள் ஒரு கும்பலோடு போய் உட்காந்திருக்கார். செயலாளரான என்னுடைய அறைச் சாவியையும் பொருளாளர் அறையின் சாவியையும் வாங்கி வச்சுகிட்டார். இப்பவும் நாங்க சட்டப்படியே அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கலாம்னு இருக்கோம்" என்றார் ரிஷி.



source https://cinema.vikatan.com/television/the-background-details-of-the-issues-in-the-tv-actors-union

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக