Ad

செவ்வாய், 29 செப்டம்பர், 2020

`கொரோனா உயிரிழப்புகளின் நேரடி எண்ணிக்கையை இந்தியா அளிப்பதில்லை!'- ட்ரம்ப் #NowAtVikatan

ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்!

கொரோனா உயிரிழப்புகள் குறித்த நேரடி எண்ணிக்கையை சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் அளிப்பதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜோ பைடன் - ட்ரம்ப்

நவம்பரில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக தேர்தலில் மோதும் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜோ பைடன் ஆகியோர் கலந்துகொண்ட நேரடி விவாதம் கிளைவ்லேண்டில் நடந்தது. அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் 3 விவாதங்களில் முதலாவது விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஜோ பைடன், `அமெரிக்காவில் இதுவரை 70 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிபரிடம் இதுகுறித்து எந்த செயல்திட்டமும் இல்லை. மற்ற உலக நாடுகளைவிட அமெரிக்க இந்த விவகாரத்தில் மோசமான நிலையில் இருக்கிறது' என்றார்.

ட்ரம்ப்

அப்போது குறுக்கிட்ட ட்ரம்ப், `அது சீனாவின் தவறு. அது நடந்திருக்கவே கூடாது. அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இறப்பு எண்ணிக்கை மேலும் பல லட்சங்களைத் தாண்டியிருக்கும். இறப்பு எண்ணிக்கை பற்றி பேசினால், சீனாவில் எவ்வளவுபேர் இறந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. அதேபோல், ரஷ்யா மற்றும் இந்தியாவில் இறந்தவர்கள் எண்ணிக்கை பற்றித் தெரியாது. இறப்புகள் குறித்த நேரடியான எண்ணிக்கையை அவர்கள் அளிக்கமாட்டார்கள்'' என்று பேசினார்.

Also Read: 10 வருடங்களாக வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்... நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட ஷாக் தகவல்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு!

பாபர் மசூதி

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே குற்றம்சாட்டப்பட்டவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 32 பேரும் தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டிருந்தார்.

Also Read: பாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?



source https://www.vikatan.com/news/general-news/30-09-2020-just-in-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக