Ad

புதன், 30 செப்டம்பர், 2020

அன்லாக் 5.0: `அக்டோபர் 15; தியேட்டர்கள் திறக்க அனுமதி!' - மத்திய அரசின் புதிய தளர்வுகள் என்னென்ன?

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கும் நோக்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அளிக்கும்.

லாக்டௌன்

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களைத் திறப்பது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம். பள்ளிக்கு மாணவர்கள் வரும் விவகாரத்தில் பெற்றோர்களின் ஒப்புதல் அவசியம்.

Also Read: `பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு!’ - அக்டோபர் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்தைத் தடை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு விதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள் அக்டோபர் 15-க்குப் பிறகு திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

லாக்டௌன்

வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய நீச்சல்குளங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு திறந்துகொள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் வழங்கும். மாநிலத்துக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பெர்மிட் போன்றவை தேவையில்லை.



source https://www.vikatan.com/news/india/home-ministry-releases-unlock-50-guidelines

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக